விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் மாற்றுதிறனாளி வேட்பாளருக்கு உரிய வசதிகள் செய்துதரவில்லை என்றும் நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு உடனடியாக டெபாசிட் தொகையை தரக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இடைத்தேர்தலில் போட்டியிட 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. வேட்பு மனு தாக்கலில் 55 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு மீதான பரிசீலனை இன்று விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
வேட்பு மனு பரிசீலனை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முதல் மாடியில் நடைபெற்றதால் மாற்றுதிறனாளி முதல் மாடிக்கு செல்ல வசதிகள் செய்யவில்லை என கோரி திருக்கோவிலூர் ஆலூர் கிராமத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி பாலகிருஷ்ணன் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். வேட்பு மனு பரிசீலனையில் மாற்று திறனாளியின் மனு நிராகரிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட்டதால் ஸ்ரீமதியின் தாயார் செல்வி உள்பட நான்கு சுயேட்சை வேட்பாளர்கள் முத்துக்குமரன் கோவிந்தராஜ் உடனடியாக டெபாசிட் தொகை தரக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மனுக்கள் பரிசீலனை அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வேட்பு மனு மீதான பரிசீலனை
இடைத்தேர்தலில் போட்டியிட 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. வேட்பு மனு தாக்கலில் 55 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு மீதான பரிசீலனை இன்று விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய மூன்று கட்சிகளின் வேட்பாளர்களான திமுகவை சார்ந்த வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டன.