தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 6 ஆம் தேதி மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான ஆரம்ப புள்ளிதான் தகவல்கள் கூறுகின்றன.



 

இறுதிகட்ட வேட்புமனு தாக்கல்

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிடுபவர்கள் ஆரவாரத்துடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். இலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு சத்தியா என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல் திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய ஒன்றியங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.



 

அதேபோல் சிங்கப்பெருமாள் கோவில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஜெய் என்பவர், தனது ஆதரவாளர்களுடன் விஜய் மக்கள் இயக்க கூடிய ஏந்திக் கொண்டு ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்தபோது விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் சூரிய நாராயணன் மற்றும் எம்எஸ் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் முறையாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

 



 

வெற்றி வாய்ப்பு

 

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, செங்கல்பட்டு மாவட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட நபர்கள் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட உள்ளனர். அதேபோல் காஞ்சிபுரத்திலும் 20க்கும் மேற்பட்ட நபர்கள் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தனர். இதற்கு முன் நடந்த தேர்தலில் சில இடங்களில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி அடைந்துள்ளனர். தற்போது முதல்முறையாக விஜய் அவர்களின், பெயரை முன்னிறுத்தி போட்டியிட உள்ளதால், பலர் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். 

 


செங்கல்பட்டு மாவட்டம் 

 

செங்கல்பட்டு மாவட்டத்தில்   உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு  முதற்காட்டமாக உட்பட்ட 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 74 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 160 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 1230 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறுகிறது.  இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 80 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும் 199 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 1449 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடத்தப்படுகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X