Anurag Thakur: அனுராக் தாக்கூர் போட்டியிடும் ஹமிர்பூர் தொகுதியில் ஜுன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


அனுராக் தாக்கூர் உடற்பயிற்ச் விடியோ:


இமாச்சல பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் அனுராக் தாக்கூர், உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த உடற்பயிற்சி கூடத்திற்கு, பாஜக சின்னம் பொறித்த துண்டை தோளில் அணிந்தவாறு சென்று உடற்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவரது ஆதரவாளர்கள் அனுராக் தாக்கூரை சூழ்ந்து நின்றிருந்தனர்.






இமாச்சலபிரதேச மக்களவை தேர்தல்:


வடகிழக்கு மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் கடைசி கட்டமாக, வரும் ஜுன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் வரும் 7ம் தேதி தொடங்கி 14ம் தேதி நிறைவடைகிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் 4 தொகுதிகள் உள்ளன. அதில் ஹமிர்புர் தொகுதியில் அனுராக் தாக்கூர் போட்டியிடுகிறார். கடந்த 3 தேர்தல்களிலும் அனுராக் தாக்கூர் தான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற, அனுராக் தாக்கூர் இப்போதே தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் சத்பால் சிங் ரைசதா களமிறங்கியுள்ளார்.


கங்க்ரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆனந்த் சர்மாவும், அவரை எதிர்த்து பாஜக சார்பில் ராஜிவ் பரத்வாஜ் என்பவரும் போட்டியிடுகின்றனர்.மணாலி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத்தை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது. அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தற்போதயை மாநில பொதுப்பணி அமைச்சரான விக்கிரமாதித்யா சிங் போட்டியிடுகிறார்.


சிம்லா நாடாளுமன்றத் தொகுதியில் 6 முறை எம்.பி-யாக இருந்தவரும், முன்னாள் கேபினட் அமைச்சருமான சத்பால் சிங் சுல்தான்புரியின் மகனுமான கசௌலி காங்கிரஸ் எம்.எல்.ஏ வினோத் சுல்தான்பூரியாவுக்கும், தற்போதைய பாஜக எம்.பி சுரேஷ் காஷ்யப்புக்கும் இடையே போட்டி நிலவுகிறது.