தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என அனைவரும் கடந்த ஒரு வாரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் வேட்பாளர்கள் அதிக வாக்கு பெற வித்தியாசமான பிரச்சாரம் செய்து மக்களை கவர்ந்து வருகிறார்கள். மேலும் முக்கிய அரசியல் கட்சியின் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரையை மேற்க்கொண்டு வருகிறார்கள்.


இந்நிலையில் திருச்சி மாநகராட்சியில் தேமுதிக சார்பாக 3 பேர் தேதலில் போட்டியிடுகிறார்கள் இவர்களை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த பிரச்சாரம் செய்தார். அப்போது திருச்சி மாநகராட்சியில் தேமுதிக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உங்களின் முழு ஆதரவை கொடுத்து வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


நமது வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் மக்களின் குறைகளை உடனுக்கு உடன் தீர்த்து வைப்பார்கள். மக்களின் ஒருவன், உங்களின் ஒருவனாக பணியாற்றுவார்கள். குறிப்பாக கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவார்கள். ஆகையால் தேமுதிக வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரத்தில் கேட்டுக்கொண்டார். 




இதனை தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த் கேப்டன் உடல்நலத்துடன் உள்ளார். தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். யார் வெற்றி பெற்று வந்தால் உங்கள் வார்டுகளுக்கு நலத்திட்டங்கள் செய்வார்கள் என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார். அதிமுக, திமுக ஆட்சிகளில் பல உள்ளாட்சி பகுதிகள் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. இரு கட்சிகளும் ஆட்சியில் இருக்கும்போது மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படவில்லை.


தமிழகத்தில் பல உள்ளாட்சிகளில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் மக்களுக்கு கிடைக்கவில்லை என்ற சூழ்நிலை தான் உருவாகி உள்ளது. ஆகையால் மக்களின் நலனை மட்டுமே கவனத்தில்கொண்டு செயல்படும் கட்சி தேமுதிக மட்டும்தான். மேலும் தேமுதிக வெற்றி பெற்றவுடன், காந்தி மார்க்கெட் பகுதியில் ஷேர் ஆட்டோ வசதி செய்தி தரப்படும். வெற்றி பெறும் முன்னரே பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்யும் தேமுதிக வேட்பாளர்கள், வெற்றி பெற்றால் இன்னும் பல நன்மைகள் செய்வார்கள் என்றார்.


தேர்தல் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்னதாக அமைக்கபட்டு இருந்த மேடையில்  தேமுதிக நிர்வாகி ஒருவர்  தனியாக மைக்கில் பாடல் பாடியும், உரையாற்றியதும், பின்பு மது போதையில் பாடலுக்கு ஒருவர் நடனம் ஆடியதும் சமூக வலையதளங்களில் வைரலாகி வருகிறது.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண