தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி இருக்கின்றனர். கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, நடிகர் விஜய் தனது ரசிகர்களால் பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முதல் ஆளாக தனது விருப்ப சிவப்பு நிற ஆல்டோ காரில் சென்று நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி 192 வது வார்டு வாக்குசாவடிக்கு வந்து தனது வாக்கை செலுத்தினார்.
இருப்பினும், விஜயை பார்க்கும் ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் வாக்குசாவடியில் குவிந்ததால் பாதுகாப்பு காரணமாக அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அப்பொழுது, விஜய் வாக்களர்களை கடந்து சென்று ஓட்டு செலுத்த சென்றபோது, ரசிகர்கள் அவரை சுற்றி சூழ்ந்தனர். இதனால், அங்கு வாக்காளர் மற்றும் விஜய் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைபார்ந்து, பதறிய விஜய் அங்கு நின்றிந்த பெண் வாக்காளர்களிடம் சாரி, சாரி என்று கூறிவிட்டு இரு கைகளையும் கூப்பி மன்னிப்பு கேட்டார். தற்போது இந்த வீடியோவும் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவையும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்