தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவில் இன்று காலை முதலே பல அரசியல் கட்சியின் பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் ஆகியோர் வாக்களித்து வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து பொது மக்களும் ஆர்வமுடன் தேர்தலில் வாக்களித்து வருகின்றனர். 


 


இந்நிலையில் சென்னையின் 122 வார்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்துடன் வாக்களித்தார். தேனாப்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.டி கல்லூரியில் முதலமைச்சர் தன்னுடைய குடும்பத்துடன் வாக்களித்தார். 


 






இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், “சென்னையின் 122ஆவது வார்டில் நான் வாக்களித்தேன். இன்று நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு மக்கள் வாக்களித்து அவர்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மகாத்மா காந்தி கூறியதை போல் மிகவும் முக்கியமான அமைப்பு. அந்த அமைப்பின் மூலமாக தான் மக்களுக்கு அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க முடியும். கோவையில் ராணுவம் வருவதற்கான எந்தவித சம்பவங்களும் நடைபெறவில்லை.


 






அதிமுகவினர் தோல்வி பயத்தால் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். திமுகவினர் தவறு செய்ததாக ஆதாரத்துடன் நிரூபித்தால் நடவடிக்கை எடுக்க தயார். அதிமுகவின் தோல்வியை மூடி மறைப்பதற்கு எஸ்.பி. வேலுமணி தலைமையினான அதிமுகவினர் நாடகம் நடத்தியிருக்கின்றார்கள்” எனப் பேசியுள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண