தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்றது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 8  பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 246 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளில் ஏற்கனவே, 5 வேட்பாளர்கள்  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதல் மீதம் உள்ள  241 பதவிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு பின்னர் மாவட்டம் முழுவதும் 7 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.


 




 
இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது இருந்தே திமுக கூட்டணி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் முன்னணி வகித்தது. தொடர்ந்து முன்னணியில் இருந்த திமுக கூட்டணி இறுதி நிலவரப்படி  மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சி 3 நகராட்சி,8 பேரூராட்சிகளையும்  ஒட்டுமொத்தமாக கைப்பற்றியது.


 




வாக்கு எண்ணிக்கை தொடங்கி திமுக கூட்டணி முன்னணி நிலவரம் குறித்து அறிந்த திமுக கூட்டணி கட்சியினர் வாக்கு எண்ணும் மையங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெற்றிச் சான்றிதழ்களை வழங்கினர். வெற்றி சான்றிதழ்களை  பெற்ற வேட்பாளர்கள், தொண்டர்கள் உற்சாகமாக வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியே சென்று திமுக தொண்டர்கள் மற்றும் உறவினர்களுடன் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.


 




 


கரூர் மாவட்டத்தில் 7 இடங்களில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டது. குறிப்பாக 8 பேரூராட்சிகள் மற்றும் 3 நகராட்சிகள் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வெற்றி சான்றுகளுடன் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியே வந்தனர். சுமார் மதியம் 12 மணி அளவில் 3 நகராட்சி, 8பேரூராட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கரூர் மாநகராட்சியில் 48வார்டு பகுதியை கொண்ட நிலையில் 3 ,3 வார்டுகள் ஆக வாக்கு எண்ணும் மையத்திற்கு வேட்பாளர்கள் முகவர்கள் மற்றும் இணைய முகவரிகள் அனுப்பப்பட்டு அவர்கள் தங்கள் வேட்பாளர் வாங்கிய ஓட்டுக்களை  குறித்துக்கொண்டு வெளியே வந்தனர்.


 




சுமார் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட தபால் வாக்கு அதைத்தொடர்ந்து ,1வது வார்டு, 2 வது வார்டு உள்ளிட்ட  48-வார்டு பகுதியிலும் விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் மதியம் 3 மணியளவில் கரூர் மாநகராட்சி 48 வார்டு பகுதியில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டது. அதன்படி கரூர் மாநகராட்சி 48 வார்டு பகுதியில் ,42 வார்டு பகுதியில் திமுக தன்னிச்சையாக வென்றுள்ளது. அதை தொடர்ந்து 2 வார்டுகளில் அதிமுகவும், ஒரு கம்யூனிஸ்ட் கட்சியும், ஒரு காங்கிரஸ் கட்சி வார்டு உறுப்பினர்களை அதைத் தொடர்ந்து 2 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றிபெற்று 48 வார்டு பகுதிகளில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றது.


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, ABPநாடு தளத்துடன் இணைந்திருக்கவும்


நகராட்சியாக இருந்த கரூர் தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் பெண் மேயரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்பதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டு இருந்தது. தற்போது கரூர் மாநகராட்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியுடன் 44 வார்டு உறுப்பினர் கொண்டு பெரும் பலத்துடன் மாநகராட்சியில் இருப்பதால் மற்ற இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும் விரைவில் திமுகவில் இணைய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் இரண்டு அதிமுக வேட்பாளர்களும் திமுகவில் இணைவார்களா அல்லது தங்களது தலைமைக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்பது போகப்போகத்தான் தெரியும்.


மொத்தத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சி, 8 பதவியையும், தேர்தலில் அதிக இடங்களில் திமுக வென்று மாநகராட்சி மேயர் பதவியையும், நகராட்சி சேர்மன் பதவியையும், பேரூராட்சி தலைவர் பதவியும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.