நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு  தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.






இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “நடந்து முடிந்திருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தில் அமைந்துள்ள மதசார்பற்ற கூட்டணிக்கு வெற்றி தந்ததற்கு தமிழ்நாடு மக்களுக்கு நன்றிகள். கடந்த 9 மாத கால ஆட்சிக்கு மக்கள் வழங்கி இருக்கும் நற்சான்று இந்த வெற்றி. இது திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்திருக்கும் அங்கீகாரம். மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். இந்த வெற்றியை கண்டு நான் கர்வம் கொள்ளவில்லை. எனக்கு பொறுப்பு அதிகரித்திருக்கிறது” என தெரிவித்துள்ளார். 


தொடர்ந்து பேசிய அவர், “பெண்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவதுதான் கழகத்தின் லட்சியம், கழகத்தின் குறிக்கோள். இந்த தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். மக்களின் பிரச்னைகள் உடனுக்குடன் தீர்க்க வேண்டும். இதை தொடர்ந்து நான் கண்காணிப்பேன்” என தெரிவித்தார்.




TN Urban Election Results 2022 LIVE: ஜெயிக்கப்போவது யாரு? மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியை கைப்பற்றுவது யார்? அடுத்தடுத்து அப்டேட் இதோ! 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண