அரசியல் களத்தில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் கோட்டைகளாக சில இடங்கள் இருக்கும். ஒவ்வொரு தலைவர்களும் அந்தந்த இடங்களில் ஆக்டீவாகவும், வலிமையாகவும் இருப்பார்கள். ஆனால் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இந்த விதியை மாற்றியுள்ளது. பல தலைவர்களின் ஏரியாக்கள் இடம் மாறிக் கிடக்கிறது.
எடப்பாடி பழனிசாமி வசிக்கும் சேலம் நெடுஞ்சாலை நகர் 23வது வார்டில் திமுக வேட்பாளர் சிவகாமி அறிவழகன் வெற்றி பெற்றார். சேலம் மாநகரத்தில் இதுவரை முடிவு வெளியான 15 வார்டுகளில் திமுக கூட்டணி 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது
உடுமலை நகராட்சியில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் சொந்த வார்டிலும் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. உடுமலை நகராட்சி 2வது வார்டில் திமுகவை விட 10 மடங்கு குறைவான வாக்கு பெற்று டெபாசிட்டையும் இழந்துள்ளது அதிமுக.
வேலுமணி தொகுதியில் அதிமுக வாஷ் அவுட் ஆகும் நிலை உருவாகியுள்ளது. அனைத்து பேரூராட்சியிலும் திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது. தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் 6 வார்டுகளில் 5 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது. வேடபட்டி பேரூராட்சியில் 6 வார்டுகளில் 4 வார்டுகளிலும், தாளியூர் பேரூராட்சியில் 6 வார்டுகளில் 5 இடங்களிலும், பேரூர் பேரூராட்சியில் 8 வார்டுகளில் 7 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக இதுவரை 23 வார்டுகளில் வெற்றி. கோவையில் இதுவரை 3 நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஸ்-ன் சொந்த தொகுதியான போடிநயக்கனூர் - குச்சனூர் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. மொத்தமுள்ள 12 வார்டுகளில் 11 இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில் சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளது