காஞ்சிபுரம்பொன்னேரிக்கரைஅண்ணா பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள 2024-பாராளுமன்ற தொகுதி தேர்தலில் வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பொதுத் தேர்தல் பார்வையாளர் புபேந்திர எஸ்.சௌத்திரி, காவல் பார்வையாளர்  பரத்ரெட்டி பொம்மாரெட்டி, மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி , ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.


காஞ்சிபுரம், இன்று பொன்னேரிக்கரை, அண்ணா பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள 2024-பாராளுமன்ற தொகுதி தேர்தலில் வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பொதுத் தேர்தல் பார்வையாளர் புபேந்திர எஸ்.சௌத்திரி,  காவல் பார்வையாளர் பரத்ரெட்டி பொம்மாரெட்டி, மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.


பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது


காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை, அண்ணா பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள 2024-பாராளுமன்ற தொகுதி தேர்தலில் 037- காஞ்சிபுரம், 032 -செங்கல்பட்டு, 033-திருப்பேரூர், 034-செய்யூர் (SC), 035-மதுராந்தகம் (SC), 036- உத்திரமேரூர்  ஆகிய 06 சட்டமன்ற தொகுதிகளில்  வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Polled Ballot Unit, Control Unit, VVPATs) ஆகியவைகளை பொதுத் தேர்தல் பார்வையாளர் காவல் பார்வையாளர்  மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அனைத்துக்கட்சி வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில்  அண்ணா பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.




தொடர்ந்து கண்காணிப்பு பணி


தொடர்ந்து பாதுகாப்பு அறையினை கண்காணிப்பு கேமரா மூலம் அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கண்காணிக்கும் அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கி.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.க.சங்கீதா, அனைத்துக்கட்சி வேட்பாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை கண்காணிக்க காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில், சுழற்சி முறையில் தலா 6 நபர்கள் அடங்கிய 10 குழுக்கள் 24 மணி நேரமும் இன்று முதல் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.


60 காவலர்கள்


மேலும் பாதுகாப்பு அறையினை கண்காணிக்க மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய பாதுகாப்பு படையில் 24 காவலர்களும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 45 காவலர்களும், தமிழ்நாடு காவல் துறையில் 63 காவலர்களும், நாள் ஒன்றுக்கு 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 3 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 3 ஆய்வாளர்கள், 21 உதவி ஆய்வாளர்கள், 60 காவலர்கள் என 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.




மூன்று அடுக்கு பாதுகாப்பு என்றால் என்ன ?


வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் இடத்தில்  மூன்று அடுக்கு பாதுகாப்பு  தேர்தல் ஆணையத்தின் தீவிர கண்காணிப்புக்கு செயல்படும்.    முதல் அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் (   அதாவது வாக்கு இயந்திரங்கள்  வைக்கப்பட்டுள்ள அறையின் அருகே )   துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.   இரண்டாவது அடுக்கில் தமிழ்நாடு ( அந்தந்த மாநில ) சிறப்பு காவல் படை அல்லது ஆயுதப்படை போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மூன்றாம் அடுக்கில் உள்ளூர் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்,  அதே போன்று மூன்றாவது அடுக்கில் தேவை ஏற்பட்டால் போக்குவரத்து காவலர்களும் பணியில் இருப்பார்கள். பாதுகாப்பு நெறிமுறைகளை கண்காணிக்கும் பணிகள்    சம்பந்தப்பட்ட தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆகியோர்  கண்காணிக்க வேண்டும்.