நீலகிரி மாவட்ட மக்களவைத் தொகுதிக்கு உட்பட குன்னூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் குன்னூர்  ராமச்சந்திரன் வெற்றிபெற்றுள்ளார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 61,820. அவருக்கு எதிராக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வினோத் 57,715 வாக்குகள் பெற்றிருந்தார். தற்போது அந்தத் தொகுதிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்  4105 வாக்கு வித்தியாசத்தில் ராமச்சந்திரன் வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி திமுக கூட்டணி 152 இடங்களிலும் அதிமுக கூட்டணி 81 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இதுதவிர மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 17 இடங்களிலும் மதிமுக 4 இடங்களிலும், சிபிஎம் மற்றும் சிபிஐ தலா இரண்டு இடங்களிலும் விசிக 4 இடங்களிலும் பிற கட்சிகள் 5 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.


அதிமுக கூட்டணியில் பாமக 5 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் பிற கட்சிகள் 1 இடத்திலும் முன்னிலையில் இருக்கிறது.