வால்பாறை தொகுதி அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி 12365 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்  கம்யூனிஸ்ட்டின்  ஆறுமுகத்தைத் தோற்கடித்தார். இதன்மூலம் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிகளில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது அந்தக் கட்சி.


தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி திமுக கூட்டணி 149 இடங்களிலும் அதிமுக கூட்டணி 84 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இதுதவிர மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 17 இடங்களிலும் மதிமுக 4 இடங்களிலும், சிபிஎம் மற்றும் சிபிஐ தலா இரண்டு இடங்களிலும் விசிக 4 இடங்களிலும் பிற கட்சிகள் 5 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாமக 5 இடங்களிலும் பாஜக 4 இடங்களிலும் பிற கட்சிகள் 1 இடத்திலும் முன்னிலையில் இருக்கிறது.