தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் கேஆர்எம் ராதாகிருஷ்ணன் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அந்த தொகுதி மக்களுக்கான பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தேர்தல் அறிக்கை
* திருச்செந்தூரிலிருந்து காயல்பட்டிணம், ஆறுமுகநேரி, தலைவன்வடலி, புன்னக்காயல், முத்தையாபுரம் வழியாக தூத்துக்குடிக்கு புதிய இரயில் போக்குவரத்து அமைத்து தருவேன்.
* தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்செந்தூர் முதல் சென்னைக்கு தினந்தோறும் வந்தே பாரத் இரயில் சேவையும், இரயில்வே மேம்பாலமும் கொண்டு வருவேன்.
* தொகுதியில் டாக்டர். அம்பேத்கர் சட்டக்கல்லூரி மற்றும் அரசு தொழில் நுட்பக்கல்லூரி, இலவச IAS, IPS, TNPSC அகடாமி அமைத்து தருவேன்.
* தொகுதிக்குட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டு மத்திய அரசின் நவோதயா பள்ளியை நிறுவி அதில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
* திருச்செந்தூர் முருகன் கோவில் வழிப்பாதையை சீரமைத்து நவீன பாதாள சாக்கடைத் திட்டத்தை மேம்படுத்தி, வருகை தரும் பக்தர்களுக்கு அதிக தங்கும் விடுதிகளை உருவாக்கி 24 மணி நேர குடிநீர் சேவையை பெற்றுத் தருவேன்.
* திருச்செந்தூர் நகரில் அதிக படுக்கை வசதிகள் கொண்ட, 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணிபுரிகின்ற அளவில் நவீன Multi-Speaciality Upgrade W அமைக்கப்படும்.
* நிலம் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு 3 சென்ட் நிலமும், பட்டா இல்லாத இடத்தில் குடியிருப்பவர்களுக்கு இலவச பட்டா மற்றும் வீடுகள் கட்டித்தர உடனடி நடவடிக்கை எடுப்பேன்.
* தொகுதிக்குட்பட்ட மெஞ்ஞானபுரம், உடன்குடி, பரமன்குறிச்சி, நாசரேத், தென்திருப்பேரை, குரும்பூர், ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய நகரங்களுக்கு 24 மணி நேர மொபைல் ஆம்புலன்ஸ் சேவை செய்து தருவேன்.
* தொகுதி முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குடிநீர் இணைப்பு வழங்கி, அதில் தினந்தோறும் சுகாதாரமான குடிநீர் வழங்குவேன். ஒவ்வொரு வீட்டின் மின் இணைப்புடன் மத்திய அரசு திட்டத்தின் மானிய சூரிய ஒளி இணைப்பு ஏற்படுத்தி மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பேன்.
* திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் விரைவு தரிசனம் செய்யவும், கோவில் வளாகத்தில் திருமணம் செய்யவும் MLA Pass வழங்குவேன். நவீன கார் பார்க்கிங் வசதி செய்து தருவேன்
* தொகுதிகுட்பட்ட முக்கிய பேருந்து நிறுத்தங்களில் குளிர்சாதன வசதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை வசதியுடன் கூடிய பஸ் ஸ்டாண்டுகள் கட்டித் தருவேன்.
