ஆட்சியை இழந்த திமுக

தமிழக சட்டமன்ற தேர்தல்வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காலையில் இருந்து தவெக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை எட்ட முடியாமல் தவித்து வருகிறது.  ஆட்சி அமைக்க 117 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை ஆனால் தற்போது வரை தவெக 106 முதல் 109  தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. எனவே இன்னும் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தவெக ஆட்சி அமைக்க யார் ஆதரவு அளிப்பார்கள்.? யாருடன் விஜய் கூட்டணி அமைப்பார்.? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், ஏற்கனவே திமுக- காங்கிரஸ் கட்சியிடையே மறைமுக மோதல் உள்ளது.

Continues below advertisement

பெரும்பான்மை கிடைக்காமல் தவிக்கும் தவெக

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என ராகுல் காந்தி விரும்பினார். ஆனால் மற்ற தலைவர்களின் வற்புறுத்தலின் காரணமாக திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தது. 28 தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. எனவே இந்த 5 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும் பட்சத்தில் திமுக கூட்டணியில் இருந்து தவெகவிற்கு தாவி விஜய் முதலமைச்சராக ஆதரவு அளிக்கும்  என கூறப்படுகிறது.

பல்டி அடிக்க தயாராகும் காங்கிரஸ், பாமக

இதே போல பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. தற்போது வரை 6 தொகுதிகளில் பாமக முன்னிலையில் உள்ளது. எனவே பாமக இந்த தொகுதிகளில் வெற்றி அடையும் பட்சத்தில்  தவெகவுடன் பாமக கூட்டணி அமைக்கும் என கூறப்படுகிறது. இந்த புதிய கூட்டணியால் சவுமியா அன்புமணிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திமுக மீது அதிருப்தியில் உள்ளது.

Continues below advertisement

எனவே இன்றைய தேர்தல் முடிவில் மார்க்சிஸ்ட் 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திமுகவிற்கு தங்களது ஆதரவை அளித்தால் ஆட்சி அமைக்க தேவையான 117 தொகுதிகளை தவெக எட்ட முடியும். எனவே இன்று மாலை அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.