தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகபட்சமாக அதிமுக பொதுச்செயலாளரும் எடப்பாடி தொகுதி வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி 98,110 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தப்படியாக சோழிங்கநல்லூர் தொகுதி தவெக வேட்பாளர் பி.சரவணன் 96,780 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாமிடத்தில் இருக்கிறார். மாதவரம் தொகுதி தவெக வேட்பாளர் விஜயபிரபு 94,985 வாக்கு வித்தியாசத்தில் வென்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

Continues below advertisement

 

Continues below advertisement

தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பார்த்திராத வகையில் தவெக 108 இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு தாங்கள் சந்தித்த முதல் தேர்தலிலேயே அக்கட்சியின் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் அக்கட்சியின் தலைவர் விஜயே ஆவார். அவரும் தான் நின்ற பெரம்பூர், திருச்சி ஆகிய இரு தொகுதியிலும் வென்று அசத்தினார். இந்தத் தேர்தலில் வென்றதன் மூலம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றியது இரண்டாம் இடத்தை பிடித்தது. அதிமுக கூட்டணி 53 இடங்களை கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைகிறது.

இந்தத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசங்களில் வென்ற வேட்பாளர்கள் யார்? யார்? என்ற விவரங்களையும் தற்போது தெரிந்துக்கொள்ளலாம்.

அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள்

தொகுதிவேட்பாளர்கட்சிவாக்கு வித்தியாசம்
எடப்பாடிபழனிசாமிஅதிமுக98,110
சோழிங்கநல்லூர்சரவணன்தவெக96,780
மாதவரம்விஜயபிரபுதவெக94,984
சேலம் மேற்குலட்சுமணன்தவெக74,867
பூவிருந்தவல்லிஆர். பிரகசம்தவெக72,740
திருப்பூர் வடக்குசத்தியபாமாதவெக69,992
விராலிமலை விஜயபாஸ்கர்அதிமுக62,073
மதுரவாயல்ரேவந்த் சரண்தவெக61,509
அம்பத்தூர்பாலமுருகன்தவெக58,781
பொன்னேரிஎம். எஸ். ரவிதவெக55,768

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றவர்கள்

திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி 138 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். குமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் 214 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.