தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் முடிவில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களிலும், ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 73 இடங்களிலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது

Continues below advertisement

கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 75 வயது பாரம்பரியம் கொண்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியை விஜய் வீழ்த்தியுள்ளது இந்திய அரசியல் களத்திலேயே மிகப்பெரிய பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலினை அவரது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் தவெக வென்றுள்ளது திமுகவிற்கு விழுந்துள்ள பெரிய அடியாக கருதப்படுகிறது. இந்த நிலையில் திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் எக்ஸ் தள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

ராம் கோபால் வர்மாவின் பதிவு

தனது எக்ஸ் பக்கத்தில் ராம் கோபால் வர்மா பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் கலைஞர் கருணாநிதி அவர்கள் பின்னாள் இளைஞராக விஜய் நிற்கிறார். “தனக்கு பின்னிருக்கும் அந்த சிறுவன் தனது மொத்த கட்சியையே காலி செய்யப் போகிறார் என கலைஞர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்எனராம்கோபால்வர்மாபதிவிட்டுள்ளார்.

தவெக தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தாலும், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மைக்கான 118 இடங்கள் கிடைக்கவில்லை. இதனால் விஜய் வேறு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய்க்கு ஆதரவளிக்கப் போகும் எம்.எல்.ஏக்கள் யார்? எந்த கட்சியை சேர்ந்தவர்கள்? என்பதே தற்போதைய மிகப்பெரும் கேள்வியாக உள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் தற்போது 108 இடங்களை பெற்றுள்ளது. இதுபோக பெரும்பான்மையை எட்ட 10 இடங்கள் தேவைப்படுகிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப காங்கிரஸ் கட்சி வென்றுள்ள 5 இடங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா 2 இடங்கள் என மொத்த 11 இடங்கள் உள்ளன. இதன் மூலம் 119 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கக் கூடும்.