மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரப்பெற்றதை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையமான திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பு அறையில் வைத்து சீல் 


தமிழகத்தில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது அதில் திருவண்ணாமலை நாடாளுமன்றத்தில் மட்டும் 73.88% சதவீத வாக்கு பாதிவாகி இருந்தது, வாக்களிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் முன்னணியில் சில் வைக்கப்பட்டு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. அதனை திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரப்பெற்றதை தொடர்ந்து அதனை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திருவண்ணாமலை தொகுதி பாராளுமன்றத் தேர்தல் பொது மேற்பார்வையாளர் மகாவீர் பிரசாத் மீனா மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோர் தலைமையில் திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பு அறையில் வைத்து இன்று  சீல் வைக்கப்பட்டது.


 




மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தாவது



பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் நேற்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்று. அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் இன்றைய தினம் திருவண்ணாமலை வாக்கு எண்ணும் மையமான திருவண்ணாமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல் அடுக்கு பாதுகாப்பு மத்திய காவல் துறையினரால் வழங்கப்பட்டு 300 கேமராக்கள் மூலமாக இந்த வளாகம் முற்றிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்று அறிந்து கொள்வதற்காக ஒரு கட்டுபாட்டு மையம் இந்த வளாகத்திற்குள் ஏறப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலமாக ஒவ்வொறு பாதுகாப்பு வைப்பு அறையில் சீல் வைக்கபட்டடிருப்பது தெரியும் வகையில் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.




 


அதனை அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் தொடர்ந்து 24 மணிநேரமும் கண்காணிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முன்னதாக திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலிருந்து வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரப்பெற்றதை வாக்கு எண்ணும் மையமான திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வருவாய் கோட்டாட்சியாகள் ஆர்.மந்தாகினி (திருவண்ணாமலை) ராஜசேகரன் (திருப்பத்தூர்) தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தீபசித்ரா  மற்றும் அரசு துறை அலுவலர்கள் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.