திருவண்ணாமலை மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024 நிறைவடைந்ததையொட்டி இந்தியத் தேர்தல் ஆணைய உத்தரவின்படி இரண்டு பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வாக்கு எண்ணுகை பணிக்காக திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள தலா 102 நுண் பார்வையாளர்கள், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் என மொத்தம் 306 தேர்தல் பணி அலுவலர்களுக்கு கணினி மூலம் இரண்டாம் கட்ட சீரற்றமயமாக்கல் (Second Randomization) பணிகள் திருவண்ணாமலை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர் (Counting Observers) மகாவீர் பிரசாத் மீனா, முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது.


மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஆரணி பாராளுமன்ற தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள தலா 102 நுண் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் என மொத்தம் 306 தேர்தல் பணி அலுவலர்களுக்கு கணினி மூலம் இரண்டாம் கட்ட சீரற்றமயமாக்கல் (Second Randomization) பணிகள் ஆரணி பாராளுமன்ற தொகுதயின் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர் (Counting Observers) சுஷாந்த் கௌரவ், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி தலைமையில் இன்று  நடைபெற்றது.


இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட சீரற்றமயமாக்கலில் (Second Randomization) நுண் பார்வையாளர்கள், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் என மொத்தம் 612 அலுவலர்களுக்கு சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணுகை பணி ஒதுக்கீடு செய்து வாக்கு எண்ணிக்கை நாளில் தேர்தல் பணியாற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.


இதனை தொடர்ந்து திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிகுட்பட்ட வாக்கு எண்ணும் மையமான திருவண்ணாமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திலும் மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதிகுட்பட்ட வாக்கு எண்ணும் மையமான திருவண்ணாமலை சண்முகா அரசு தொழிற்சாலை மேல்நிலைப்பள்ளியில் திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளாகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர், ஆரணி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் தலைமையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு வசதிகள் போக்குவரத்து வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதையும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி மற்றும் அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.