திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினர் அன்பழகன் என்பவர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வினர் கள்ள வாக்குகள் போட்டுள்ளார் என்றும் ஜெயக்குமாரை விடுதலை செய்யக்கோரியும் திடீரென ஆர்ப்பாட்டத்தில் அன்பழகன் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி கொண்டே தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தடுத்து நிறுத்திய போலீசார் தண்ணீர் ஊற்றி தடுத்தனர்.
Tiruvannamalai Municipality: கள்ள ஓட்டு போட்டீங்க... ஜெயக்குமாரை விடுதலை பண்ணுங்க: அதிமுக பிரமுகர் செய்த காரியம்
அசோக் மூ | 04 Mar 2022 10:45 AM (IST)
திமுக அரசு கள்ள வாக்கு போட்டு வெற்றி பெற்றதாக கூறி அதிமுக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் தீக்குழிக்க முயற்சி செய்துள்ளார்.
திருவண்ணாமலை- அதிமுக-நிர்வாகி