தென்னிந்திய சின்னத்திரையில் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் சுஜிதா தனுஷ். பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பல படங்களில், நடித்துள்ளார். தற்போது தமிழின் பிசியான சின்னத்திரை நடிகையாக திகழ்கிறார். 'ஆனந்தம்' படத்தின் சீரியல் வெர்ஷன் என பலராலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் கலாய்க்கப்பட்டு வரும் நிலையிலும் பலர் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது இந்த சீரியல். இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜிதாவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதில் மூர்த்தி தம்பிகளுக்கு தனம் அண்ணியாகவும், அவர்களின் மனைவிகளுக்கு அக்காவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை வழி நடத்தும் பாசமான மனைவியாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா தனுஷ்.






சீரியல் நடிப்பு மட்டுமல்லாமல், விளம்பர படங்கள் இயக்குவது யூடியூப் சேனலில் குழந்தைகளுக்கு தேவையாக கதைகள் சொல்வது என சுஜிதா எப்போதும் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்வது அவர் பழக்கம். அந்த வகையில் இவர் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணைத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. சமீபத்தில் இவர் நடிகை ஹன்சிகாவை வைத்த இயக்கிய இரண்டு விளம்பரப்படங்களில் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருந்தார். அதோடு பாராதியார் இல்லத்தில் தனது குடும்பத்தினருடன் விசிட் அடித்த வீடியோககளை பதிவிட்டிருந்த நிலையில், தற்போது பேட்மிண்டன் விளையாடுவது போன்ற வீடியோவை பகிர்ந்துள்ளது வைரல் ஆகி உள்ளது.






ஓய்வு நேரங்களை தனது குடும்பத்தினருடன் கழித்து வரும் சுஜிதா எப்போதாவது தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் சுற்றுலா சென்று வருகிறார். இவர்களுக்குள் நடக்கும் ஜாலியான நிகழ்வுகள் தொடர்பான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தனது குடுபத்தினருடன் இவர் பேட்மிண்டன் விளையாடும் காட்சியை தற்போது இணைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நடிப்பு மட்டுமல்ல விளையாட்டிலும் நீங்கள் கிங் தான் என்று கூறுவது போன்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.