திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 2வது தளத்தில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் செய்தியாளர்களை சந்தித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


அவர் கூறுகையில், “இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 16ஆம் தேதி 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து அப்போதிருந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 1038 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.


மேலும் அந்த வாக்கு சாவடி மையத்தின் 106 வாக்குச்சாவடி மையம் பதற்றமான வாக்குச்சாவடி மையமாக கண்டறியப்பட்டு அதற்கான உரிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலும் தேர்தல் நடத்தை முறைகளை கண்காணிக்கும் வகையில் 4 சட்டமன்ற தொகுதிக்கு 3 தேர்தல் பறக்கும் படையினரும், 3 நிலையான கண்காணிப்பு குழு என மொத்தம் 72 குலுக்கல் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் மேலும் 22.1.24 தேதியன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின் படி 466381 ஆண் வாக்காளர்களும் 481808 பெண் வாக்காளர்களும் 130 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 948319 வாக்காளர்கள் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர் எனவும் மேலும் முதல் முறையாக 21,505 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் எனவும் கூறினார்.


இந்த நாடாளுமன்ற தேர்தலில் மாவட்டம் முழுவதும் 1501 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்ட உள்ளனர் எனவும், மேலும்  மாவட்டம் முழுவதும்  தேர்தல் பணி நடவடிக்கைகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அந்த கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.