திமுகவைச் சேர்ந்த தம்பதி திருத்துறைப்பூண்டி நகராட்சியை கைப்பற்றியது. திருத்துறைப்பூண்டி நகராட்சி தலைவராக திமுகவின் கவிதா வென்ற நிலையில், துணைத் தலைவராக அவரது கணவர் பாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேட்பாளராக சிபிஎம் கட்சியின் ராமலோகேஸ்வரி அறிவிக்கப்பட்ட நிலையில், போட்டி வேட்பாளராக களமிறங்கிய பாண்டியன் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும், திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவராக திமுக வேட்பாளர் ஆர். எஸ்.பாண்டியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு துணைத்தலைவர் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் திமுக வெற்றி பெற்றதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஏமாற்றம் அடைந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, பல்வேறு இடங்களில் திமுக போட்டி வேட்பாளர்கள் போட்டியிட்டது வருத்தம் அளிப்பதாக சிபிஎம்-ன் கே.பாலகிருஷ்ணன் கூறினார். மேலும், கூட்டணி கோட்பாட்டினை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு உள்ளதாகவும், தலைமையின் கட்டுப்பாட்டை மீறி பதவிக்காக திமுக போட்டி வேட்பாளர்கள் முறைகேடாக செயல்பட்டதாகவும், பதவிக்காக திமுகவினர் இப்படி செயல்பட்டது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்