Theni Lok Sabha Constituency: வர்ற நாடாளுமன்ற தேர்தல்க்கு ஒவ்வொரு கட்சியினரும் தங்களோட கூட்டணி கட்சிகள தேர்ந்தெடுப்பதும், அதுலயும் எந்த கட்சி சார்பாக யாரை வேட்பாளராக நிறுத்தினால் தாங்கள் வெற்றி வாய்ப்பை பெற முடியும் என நாடாளுமன்ற தேர்தல்  பணிகளில் தீவிரமா ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் இதுவரைக்கும் இருந்த எம்பியும் சரி, இதுக்கு முதலில் இருந்த எம்பியும் சரி, மாவட்ட மக்களுக்கு பெரிதாக ஏதும் செய்யவில்லை என்கிற கருத்தையே பெரும்பாலும் தேனி மக்கள் சொல்லக்கூடியதை பார்க்க முடிகிறது.




சரி இப்ப அரசியல் கட்சிகளோட நிலைமை என்ன? அப்டினு பாத்தா அதிமுகவ பொறுத்தவரைக்கும் தேனி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நிறுத்துவதற்கு வேட்பாளர் யாரும் இல்லாததாலயும் அப்படியே இருந்தாலும் கட்சி தலைமை யாராவது ஒருவர் பேரை சொன்னாலும்  செலவழிக்க தயாராக இல்லைனு கட்சிய சேர்ந்தவங்களே சொல்றாங்களாம். ஆனா அதிமுகவோட தலைமையோ தேனில இல்லாட்டி என்ன சென்னைலருந்து கூட எவ்ளோ பணம் செலவழிக்கவும் தயாரா இருக்கக்கூடிய ஒருத்தர தேனி நாடாளுமன்ற தேர்தல்ல போட்டியிடவும் அதுக்கு இப்பவே முன்னாள் அமைச்சர்கள் உட்பட 7 பேர் கொண்ட குழுவ தேனி மாவட்டத்துத்துல களம் இறக்கி வேலை ஆரம்பிச்சுருக்காங்களாம். தேனி மாவட்டத்த பொறுத்தவரைக்கும் அதிமுக னா எடப்பாடி அணியினரதான் இப்போதைக்கு சொல்ல முடியும். ஏனா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த அமமுக பொதுக்கூட்டத்துல, ஓபிஎஸ். அதிமுகவ மீட்கதான் நானும் டிடிவியும் ஒன்னு சேர்ந்துருக்கோம்னு சொன்னது,  அப்ப இவரு அதிமுகவுல இருக்கேனு சொல்லிட்டு இருக்கது பொய்தானானு கூட்டத்துல இருந்த கட்சி பொறுப்பாளர்கள் பேசியதும்,




ஓபிஎஸ்சோட மகன் ரவீந்திரநாத் இந்த தேர்தல்ல நின்னா கட்டாயம் வெற்றி வாய்ப்பு இருக்காத சூழல்லயும் அமமுகவோட சேர்ந்துட்டு பாஜகவோட கூட்டணி வச்சா தன்னோட மகன திரும்பவும் எம்பி ஆக்கலாம்னு அவரு ஒரு பக்கம் தன்னோட வேலைய நடத்தி வர்ற சூழல்ல டிடிவி தினகரனும் இந்த பகுதியில போட்டியிட வாய்ப்பு இருக்கும்னும் அரசியல் வட்டாரங்கள்ல பேசப்படுது. அப்படி ஒரு வேலை டிடிவி தினகரன் தேனி தொகுதியில போட்டியிட்டா வெற்றி வாய்ப்பு என்பது அவருக்கு அதிகமா இருக்குனும் குறிப்பா திமுகவுக்கு ரொம்ப சாதகமற்ற சூழல் ஏற்படும்னு அரசியல் வட்டாரத்துல பேசப்படுது. அப்ப திமுகவ சேர்ந்தவங்க வேலை செய்யலயானு கேட்டா? அவங்களுக்குள்ளயே குறிப்பா தேனி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர்கள்ட்ட இருக்க உட்கட்சி பிரச்சனையே உச்சத்துல இருக்கப்ப இவங்க எங்க வேலை செய்யப்போறாங்கனு பேச்சும் அடிபடுது.




சரி திமுக சார்பா யார தேனி தொகுதியில போட்டியிட வாய்ப்புனு பாத்தா தேனி வடக்கு மாவட்ட செயலாளரா இருக்க தங்க தமிழ்செல்வனு சொல்லப்படுது, ஆனா கட்சி தலைமையிட்ட இவரு சீட் கேட்டாலும் இவர் இந்த தேர்தல்ல போட்டியிட தயாரா இல்லனும் அதுக்கு காரணம் ஏற்கனவே தான் தேனி தொகுதியில போட்டியிட்டு தோல்வியானதும் தற்போது இருக்க உட்கட்சி பிரச்சனையினால கட்சிக்காரங்களே தன்ன வெற்றி பெற வேலை செய்வதும் அதுக்கு பணம் செலவழிப்பதும் என பல்வேறு குழப்பத்துல இருக்காராம் தங்கதமிழ்செல்வன்.




தேனிக்குள்ள திமுகவுல பல்வேறு குழப்பம் இருக்கதுனால தேனிய சேர்ந்த வேட்பாளர் இல்லாம மதுரைய சேர்ந்த ஒருத்தர தேர்தல்ல களம் இறக்க உள்ளதாம் திமுக. தேனியில் திமுக கட்சிக்குள்ள ஏற்பட்டுள்ள குழப்பம் இருக்கட்டும், கூட்டணி கட்சிக்கு சீட் கொடுத்தா வேலை செய்வாங்களனு கேட்டா ஒரு வேலை காங்கிரஸ்க்கு சீட் கொடுக்குறாங்கனு வெச்சா கூட திமுகவுல கட்சி வேலை செய்ய உட்கட்சி குழப்பத்தால வேலை சரிவர நடக்காதுனு அரசியல் வட்டாரங்கள்ள பேசப்படுது. ஆனால் திமுகவோட தலைமையோ எந்த தொகுதியில திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தோல்வி அடையிராங்களோ அந்த மாவட்டத்தோட மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்படும்னு சொல்லிருக்கது இந்த அறிவிப்பு தேனியில் இருக்க இரு மாவட்ட செயலாளர்கள வேலை செய்ய வைக்குமானு பாக்கலாம். தேனிய பொறுத்தவரைக்கும் வர்ற நாடாளுமன்ற தேர்தல் களம் என்பது அனைவரையும் உற்று கவனிக்க வைக்க கூடிய ஒரு முக்கிய தேர்தல் களமாவும் இருக்கும்னு அரசியல் வட்டாரங்கள்ள  பார்க்கப்படுது.