ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 பேரை பிரதமர் மோடி அறிமுக செய்து வைத்தார். பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், சுபான்ஷு சுக்லா ஆகிய 4 பேரை பிரதமர் மோடி கேரளாவில் இருக்கும் இஸ்ரோ மையத்தில் வெளியிட்டார்.
ககன்யான் திட்டம் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. 3 நாட்கள் பணிக்காக 400 கிமீ சுற்றுப்பாதையில் 4 விண்வெளி வீரர்களை கொண்ட குழுவினரை அனுப்பவும் பின் இந்திய கடல் நீரில் தரையிறங்குவதன் மூலம் அவர்களை பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது. 2025ம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்திற்கான பணிகள், தற்போது அதிவேகமாக நடைபெற்று வருகிறது. அதன் மிக முக்கிய நிலையாக கருதப்படும் விண்வெளியில் இருந்து புவிக்கும் திரும்பும் வீரர்களை, பத்திரமாக தரையிறக்கும் பணி தொடர்பான பரிசோதனையை இஸ்ரோ கடந்த அக்டோபர் மாதம் மேற்கொண்டது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முன் மாதிரி பொம்மைகள் அனுப்பப்பட்டது. 4 ஆராய்ச்சியாளர்களை விண்வெளிக்கு அனுப்பி, அங்கு பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு மீண்டும் அவர்களை பாதுகாப்பாக புவிக்கு அழைத்து வருவது தான் ககன்யான் திட்டத்தின் நோக்கம். இதற்காக வடிவமக்கப்படும் ராக்கெட்டில் 3 நிலைகள் இருக்கும். அதில் மையப்பகுதியில் தான் ஆராய்ச்சியாளர்கள் இருப்பார்கள். இந்த நிலையில் விண்கலம் தனது பயணத்த தொடங்கியதுமே, எதிர்பாராத விதமாக ஏதேனும் கோளாறு கண்டறியப்பட்டால் உடனடியாக ஆராய்ச்சியாளர்கள் இருக்ககும் எஸ்கேப் சிஸ்டம் மட்டும் தானாகவே உடனடியாகெ வெளியேறும். அதிலிருந்து க்ரூ மாட்யூல் தனியாக பிரிந்து, பாராசூட் உதவியுடன் இந்திய பெருங்கடலில் தரையிறங்க வேண்டும். ககன்யான் திட்டத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பல முக்கிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இன்று கேரளாவில் இருக்கு விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் செண்டரில், ககன்யான் திட்டத்தில் இடம்பெற்றுள்ள 4 விண்வெளி வீரர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய பிரதமர், “தற்போது அறிவிக்கப்பட்ட 4 வீரர்கள் வெறும் 4 பெயர்கள் அல்ல 4 மனிதர்கள் அல்ல, 140 கோடி இந்தியர்களின் அபிலாஷைகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்லப் போகும் நான்கு சக்திகள். 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர்கள் விண்வெளிக்கு செல்கின்றனர். இந்த முறை நேரம் நமதே, கவுண்டவுன் நமதே, ராக்கெட்டும் நமதே. ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும், நிகழ்காலத்தை மட்டுமல்ல, அதன் வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தையும் வரையறுக்கும் சில தருணங்கள் உள்ளன. இன்று இந்தியாவிற்கு அப்படி தான் அமைந்துள்ளது இந்த தருணம். 4 வீரர்களை நான் கண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒட்டுமொத்த இந்தியா சார்பில் நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.