தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வோம் என்று தஞ்சையில் நடைபெற்ற ஏஐடியூசி சிறப்பு பேரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் ஏஐடியுசி தொழிற் சங்கத்தின் மாவட்ட அளவிலான சிறப்பு பேரவை கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் வெ.சேவையா தலைமையில் நடைபெற்றது. ஏஐடியுசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் சிறப்பு பேரவையை துவக்கி வைத்து பேசினார். மாநிலச் செயலாளர் ஆர். தில்லைவனம்  மாநில குழுவின் முடிவுகள் பற்றியும், தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்தும் பேசினார். கூட்டத்தில் நடைபெறும் தமிழ்நாட்டின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி  களம் இறங்கி தமிழ்நாட்டை கைப்பற்ற நினைக்கிறது.

தமிழ்நாட்டின் கல்வி உரிமை, மாநிலங்களுக்கான நிதி பகிர்வு, இந்தி மொழியை திணிக்கின்ற மும்மொழி கொள்கை உள்ளிட்ட தமிழ்நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாரதிய ஜனதா அரசு ஒருதலைப்பட்சமாக தமிழ்நாட்டை வஞ்சித்து உரிமைகளை பறித்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டு எடுக்கவும், சாதி மத மோதல்களை தடுத்திடவும், மனுதர்ம சனாதன இந்துத்துவா கொள்கைகளை முறியடிக்கவும் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தஞ்சை மாவட்டத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கம் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டிய அவசியம் குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்து வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

Continues below advertisement

ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் தினத்தன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் பந்தல்கள், நிழற்கூரைகள், தண்ணீர் பாட்டில்கள், பழச்சாறுகள் உள்ளிட்; தேர்தல் ஆணையம் சிறப்பு குழு அமைத்து ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று ஏஐடியுசி சிறப்பு பேரவை தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ஏஐடியுசி மாவட்ட பொருளாளர் தி.கோவிந்த ராஜன்,மாவட்ட செயலாளர் துரை. மதிவாணன், சுமை சங்க மாநிலத் தலைவர் அ.சாமிக்கண்ணு, பட்டு கைத்தறி சங்க மாநில தலைவர் கோ.மணி மூர்த்தி, உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் தி.திருநாவுக்கரசு, மின்வாரிய சங்க மாநிலத் துணைத் தலைவர் பொன். தங்கவேல், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கோடீஸ் வரன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் இரா. செந்தில்நாதன், ஓய்வு பெற்ற பேராசிரியர் கோ.பாஸ்கர், கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க பொருளாளர் சி.ராஜமன்னன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாதுரை, நுகர்பொருள் வாணிப கழக சங்க நிர்வாகி சந்தான கிருஷ்ணன், கட்டுமான சங்க மாவட்ட தலைவர் ரெ.சேகர், தையல் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.கல்யாணி, உடல் உழைப்பு சங்க மாவட்ட பொருளாளர் பி.சுதா மற்றும் ராஜகோபால், சுந்தர பாண்டியன், செல்வராஜ், கருணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.