கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் பெரும்பாலான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. நாகர்கோவில் மாநகர முதல் மேயராக திமுகவை சேர்ந்த மகேஷ்  தேர்ந்தெடுக்கப்பட்டார். மயிலாடி பேரூராட்சியில் உறுப்பினர்  ஒருவர் வராததால் தேர்தல் ஒத்திவைப்பு.


தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இந்தத் தேர்தலின் முடிவுகள் கடந்த மாதம் 22-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் திமுக 21 மாநகராட்சியில் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள் இம்மாதம் 2ஆம் தேதி பதவியேறறனர். இன்று நகர்ப்புற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்டவற்றின் மேயர், துணை மேயர், தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி உட்பட 4 நகராட்சி மற்றும் 51 பேரூராட்சிகளுக்கு  அமைப்புகளுக்கான  112 பதவிகளுக்கு  இன்று போட்டி நடைபெற்றது. நாகர்கோவில் மாநகர மேயர் பதவிக்கு நடைபெற்ற மறைமுக தேர்தல் 52 மாமன்ற உறுப்பினர்கள் தனது வாக்குகளை பதிவு செய்தனர். அதில்  பாஜக வேட்பாரளர்   மீனதேவை விட   4 ஓட்டுகள் அதிகமாக பெற்று திமுகவை சேர்ந்த மகேஷ் வெற்றி பெற்ற நிலையில்.  அவர் மேயராக பதவியேற்று கொண்டார்.    


மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் போட்டியிட மேரி பிரின்சி  லதா,  திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் அவரை எதிர்த்து போட்டி வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் போட்டியிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 52 மாமன்ற உறுப்பினர் களும் வாக்குகளை பதிவு செய்ததில் மேரி பிரின்சி லதா போட்டி வேட்பாளரான ராமகிருஷ்ணனை விட 4 வாக்குகள் அதிகமாக பெற்று துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில்.  குழித்துறை நகராட்சியில்  -திமுக போட்டி  வேட்பாளர் ஆசை தம்பி பாஜக  ஆதரவுடன் வெற்றி பெற்றார். கொல்லங்கோடு  நகராட்சியில் கூட்டணி வேட்பாளர் கம்யூனிஸ்ட் ஐ தோக்கடித்து  ராணி திமுக வெற்றி பெற்றார்.   பத்மநாபபுரம் நகராட்சியில் அருள் சோபன் திமுக வெற்றி பெற்றார்.   குளச்சல் நசீர் திமுக போட்டி வேட்பாளர்வெற்றி பெற்றார்.  மேலும் 51 பேரூராட்சிகளில், 50 பேரூராட்சி தேர்தலில் . திமுக., -18   காங்கிரஸ்-15  பா.ஜ.க., - 8    சுயேட்சை- 4   கம்யூனிஸ்ட் - 3 அதிமுக -2 என வெற்றி பெற்றனர்.  மயிலாடி பேரூராட்சி  பேரூராட்சி உறுப்பினர் வராததால் தேர்தல் தியதி அறிவிக்கப்படாமல்  ஒத்திவைக்கப்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண