Lok sabha election 2024: சீர்காழி அருகே அமைச்சர் வந்து சென்றும் விடிவுகாலம் இல்லை - தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

சீர்காழி அருகே கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எவ்விதமான அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என கூறி கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Continues below advertisement

நாடாளுமன்ற தேர்தல் 

இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஏப்ரல் 19 -ம் தேதியான இன்று நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து வருகின்ற ஜூன் 4ம் அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் மார்ச் 27 அன்று வரை நடைபெற்றதில் 30 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதில் வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 28 -ம் தேதி அன்று நடைபெற்றது. அதன்படி 17 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது, மீதம் உள்ள 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் யாரும் வேட்புமனுக்களை வாபஸ் பெறாத நிலையில் களத்தில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Continues below advertisement


சீர்காழி அருகே கார்குடி கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 1743 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஓலையாம்புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு கார்குடி கிராமத்தில் கிராம மக்கள் தங்கள் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக சாலை வசதி, குடிநீர், சுடுகாட்டிற்கு செல்லும் சாலை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை என கூறி அப்பகுதியை சேர்ந்த சுமார் 100 குடும்பங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இன்று தேர்தலை புறக்கணிக்கத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 


மேலும் அவர்கள் கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளாக அரசு தங்கள் பகுதியில் எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் செய்து தரவில்லை எனவும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதிக்கு வந்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தங்களுக்கான அடிப்படை வசதிகள் செய்துதரபடும் என உறுதியளித்து சென்றார். ஆனால் இதுநாள் வரை இப்பகுதியில் எவ்விதமான நடவடிக்கைகளும் இல்லாததால் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து ஓட்டுப் போடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சீர்காழி மதுவிலக்கு பிரிவு காவல் கண்காணிப்பாளர் லாமேக் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கபடும் என உறுதியளித்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


தொகுதி விபரம்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அடங்கியுள்ள 160-சீர்காழி (தனி) , 161 - மயிலாடுதுறை, 162- பூம்புகார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 170- திருவிடைமருதூர் (தனி), 171 - கும்பகோணம் மற்றும் 172-பாபநாசம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 1,22,727 ஆண் வாக்காளர்களும், 1,25,660 பெண் வாக்காளர்களும், 11 மூன்றாம் பாலினத்தவர்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 1,16,611 ஆண் வாக்காளர்களும், 1,18,948 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலினத்தவர்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 1,33,264 ஆண் வாக்காளர்களும், 1,37,454 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 1,29,763 ஆண் வாக்காளர்களும், 1,32,931 பெண் வாக்காளர்களும் , 12 மூன்றாம் பாலினத்தவர்களும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 1,30,162 ஆண் வாக்காளர்களும், 1,37,298 பெண் வாக்காளர்களும் , 15 மூன்றாம் பாலினத்தவர்களும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 1,27,410 ஆண் வாக்காளர்களும், 1,33,268 பெண் வாக்காளர்களும், 21 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 15,45,568 வாக்காளர்கள் உள்ளனர்.


 வாக்குசாவடிகள் விபரம்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குசாவடிகளும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குசாவடிகளும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குசாவடிகளும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 293 வாக்குசாவடிகளும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 289 வாக்குசாவடிகளும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 301 வாக்குசாவடிகளும் ஆக மொத்தம் 1743 வாக்குசாவடிகள் உள்ளன.

பதட்டமான வாக்குசாவடிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 பதற்றமான வாக்குசாவடிகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 39 பதற்றமான வாக்குசாவடிகளும் என மொத்தம் 89 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாக்குசாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வாக்குசாவடிகளுக்கு நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வாக்குசாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். 

வாக்குப்பதிவு அலுவலர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக வாக்குப்பதிவு அலுவலர்கள் 4213 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுப்படுத்தப்படுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம திருவிடைமருதூர், பாபநாசம், கும்பகோணம், ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக வாக்குப்பதிவு அலுவலர்கள் 4346 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். சுதந்திரமான நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 குழுக்கள் வீதம் 9 பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இக்குழுக்கள் வாக்காளர்களுக்கு பணம் அளித்தல், இலவசங்கள் வழங்குதல், மதுபானங்கள் அளித்தல், சட்டத்திற்கு புறம்பாக மது, போதை பொருட்களை கொண்டு வருதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மாவட்டத்தில் 85 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படை, கேரளா மாநில சிறப்பு காவல் பிரிவு உள்ளிட்ட 1480 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர். ஓட்டுப்பதிவு நாளன்று ஏற்படும் இடையூறுகள் தொடர்பாக தகவல் தெரிவிக்க 9363979788 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola