திமுக கூட்டணி 136 இடங்கள் வரை கைப்பற்றும் என்று டுடேஸ் சாணக்யா கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. தவெகவுக்கு 74 இடங்களும்,  அதிமுக கூட்டணிக்கு 56 இடங்களும் கிடைக்கும் என்றும் கணித்துள்ளது.

Continues below advertisement

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த வாரம் நடந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நேற்று முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தையை கருத்துக்கணிப்புகள் வெளியாகின. தமிழ்நாட்டில் திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பில் பெரும்பாலும் இருந்தாலும், ஆக்ஸிஸ் மை இந்தியா டுடே சேர்ந்து எடுத்த கருத்துக்கணிப்பில் விஜயின் தவெக கட்சி 98 முதல் 120 இடங்கள் வரை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 

Continues below advertisement

திமுக கூட்டணிக்கு 136 தொகுதிகள்

இந்த நிலையில், 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 136 தொகுதிகள் வரை வெல்லும் என டுடேஸ் சாணக்யா கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக கூட்டணிக்கு கணித்ததைவிட 11 இடங்கள் கூடுதலாகவும் குறைவாகவும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக கூட்டணி - தவெகவுக்கு எவ்வளவு?

அதிமுக கூட்டணி 34 முதல் 56 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தவெகவுக்கு 52 முதல் 74 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு சதவீதம்

திமுக கூட்டணிக்கு 39% வரையும் அதிமுக கூட்டணிக்கு 27% வரையும் வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தவெகவுக்கு 30% வாக்குகளும், பிற கட்சிகளுக்கு 4% வாக்குகளும் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.