Tamil Nadu Election Results 2026: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. முதன் தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அளவிற்கு உருவெடுத்திருந்தாலும், அவர்கள் ஆட்சி அமைக்க இன்னும் 11 தொகுதிகள் தேவைப்படுகிறது. விஜய் திருச்சி கிழக்கு அல்லது பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும்.

Continues below advertisement

தவெக பல தொகுதிகளில் 2வது இடத்தைப் பிடித்தாலும் அவர்கள் ஆட்சியை தனித்து அமைக்க முடியாமல் போனதற்கு காரணமான 11 தொகுதிகளைக் காணலாம். இந்த தொகுதிகளில் மிகவும் 1500 வாக்குகள் வித்தியாசத்திலே தவெக தோல்வியைத் தழுவியுள்ளது.

1.விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளர் சிவக்குமார் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட விஜய் வடிவேல் 910 வாக்குகள் வித்தியாசத்திலே தோல்வி அடைந்தார். 

Continues below advertisement

சிவக்குமார் - 69 ஆயிரத்து 727

விஜய் வடிவேல் - 68 ஆயிரத்து 817

வித்தியாசம் - 910

2. ஊட்டி:

ஊட்டியில் பாஜக வேட்பாளர் போஜராஜன் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும் தவெக வேட்பாளர் இப்ராஹிமிற்கும் இடையே 976 வாக்குகளே வெற்றி வித்தியாசம்.

போஜராஜன் - 48 ஆயிரத்து 488

இப்ராஹிம் - 47 ஆயிரத்து 512

வித்தியாசம் - 976

3.பழனி:

பழனியில் அதிமுக வேட்பாளர் ரவி மனோகரன் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளரைக் காட்டிலும் அவர் 693 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ரவி மனோகரன் - 66 ஆயிரத்து 986

பிரவீன்குமார் - 66 ஆயிரத்து 293

வித்தியாசம் - 693

4. திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் திமுக வேட்பாளர் செந்தில்குமார் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும் நசீர்ராஜாவிற்கும் இடையே 1131 வாக்குகளே வித்தியாசம் ஆகும்.

செந்தில்குமார் - 74 ஆயிரத்து 489

நசீர் ராஜா - 73 ஆயிரத்து 358

வித்தியாசம் - 1131

5.கரூர்:

கரூர் தொகுதியில் தவெக வேட்பாளரை வீழ்த்தி எம்ஆர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும் 2வது இடம் பிடித்த வேட்பாளருக்கும் இடையே 1821 வாக்குகளே வித்தியாசம் ஆகும்.

எம்ஆர் விஜயபாஸ்கர் - 71 ஆயிரத்து 542

மதியழகன் - 69 ஆயிரத்து 721

வித்தியாசம் - 1821

6. குளித்தலை:

குளித்தலை தொகுதியில் திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும் தவெக வேட்பாளருக்கும் இடையே 67 ஆயிரத்து 559 வாக்குகளே வித்தியாசம் ஆகும்.

சூரியனூர் சந்திரன்  - 68 ஆயிரத்து 138

பாலசுப்ரமணி - 67 ஆயிரத்து 559

வித்தியாசம் - 579 7. பாபநாசம்:

பாபநாசம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெற்றி பெற்றது. தவெக வேட்பாளரைக் காட்டிலும் 1065 வாக்குகளே கூடுதல் பெற்று வெற்றி பெற்றது.

ஷாஜகான் - 69 ஆயிரத்து 784

அசாரூதின் - 68 ஆயிரத்து 219 

வித்தியாசம் - 1065

8. புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் திமுக வேட்பாளர் முத்துராஜா வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும் தவெக வேட்பாளருக்கும் இடையே 1867 வாக்குகளே வித்தியாசம் ஆகும்.

முத்துராஜா - 66 ஆயிரத்து 825

ஷெரீப் - 64 ஆயிரத்து 958

வித்தியாசம் - 1867

9. திருமயம்:

திருமயம் தொகுதியில் திமுக வேட்பாளர் ரகுபதி தவெக வேட்பாளரைக் காட்டிலும் 1492 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ரகுபதி - 58 ஆயிரத்து 201

சிந்தாமணி - 56 ஆயிரத்து 709

வித்தியாசம் - 1492

10. கோவில்பட்டி:

கோவில்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளருக்கும் தவெக வேட்பாளருக்கும் இடையே 843 வாக்குகளே வித்தி்யாசம் ஆகும்.

கருணாநிதி  - 61 ஆயிரத்து 643

பாலசுப்பிரமணியன் - 60 ஆயிரத்து 800

வித்தியாசம் - 843

11. கிள்ளியூர்:

கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமாருக்கும் தவெக வேட்பாளருக்கும் இடையே சபினுக்கும் 1311 வாக்குகளே வித்தியாசம்.

ராஜேஷ்குமார்  - 66 ஆயிரத்து 436

சபின் - 65 ஆயிரத்து 123

வித்தியாசம் - 1311

இந்த 11 தொகுதிகளில் குறைவான வாக்குகளிலே தவெக தோல்வியைத் தழுவியது. இந்த தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருந்தால் விஜய் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்திருக்கலாம்.

TVK Vijay: விஜய் சாதித்தது எப்படி? 6 கட்டங்களாக பனையூரில் போட்ட ஸ்கெட்ச் - ரசிகர்கள் டூ ஒரே வேட்பாளர்