நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளை வென்ற நிலையில் விசிக, சிபிஎம், சிபிஐ, ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைப்பாரா என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் இடதுசாரிகளுடன் இணைந்தே முடிவெடுப்போம் என தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
தவெகவுக்கு ஆதரவு வருமா?
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து பல்வேறு திருப்பங்களை அரசியல் களத்தில் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை இழந்துள்ளதோடு முதலமைச்சர் ஸ்டாலினும் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் 108 தொகுதிகள் வென்று நடிகர் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அடுத்த இடத்தில் திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே தவெக ஆட்சி அமைக்க 10 தொகுதிகள் தேவை என்ற நிலை உள்ளது. எனவே திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளோடு இணைந்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
திருமா சொன்னது என்ன?
தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை, விசிக கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளிப்பீர்களா, முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, "இதுவரை அது குறித்து எதுவும் சிந்திக்கவில்லை, முடிவும் எடுக்கவில்லை எனவும் இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் நீண்ட காலமாக மதசார்பற்ற அரசியல் களத்தில் ஒன்றாக பயணித்து வருகிறோம்.எதிர்காலத்திலும் இணைந்தே முடிவு எடுப்போம் எனக் கூறினார்.
நாங்கள் நினைத்தது நடந்தது:
தேர்தல் முடிவு திமுக கூட்டணியின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் உள்ளது. தமிழ்நாட்டில் எந்த வகையிலும் மதவாத சக்திகள் வந்து விட கூடாது நுழைய கூடாது என நினைத்தோம் அது போல் நடந்துள்ளது. நாங்கள் எடுத்த மாபெரும் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. எங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இது வரை அது குறித்து எதுவும் சிந்திக்கவில்லை, முடிவும் எடுக்கவில்லை. இடதுசாரிகள் விடுதலை சிறுத்தைகள் நீண்ட காலமாக மதசார்பற்ற அரசியல் களத்தில் ஒன்றாக பயணித்து வருகிறோம். எதிர்காலத்திலும் இணைந்தே முடிவு எடுப்போம் என்றார்.
