தமிழ்நாட்டு மக்கள் மற்றும் உலகமெங்கும் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் வணக்கம். இந்த தேர்தலில் கூட ஒரு ஓட்டுக்கு மூவாயிரம் வழங்குவதாகவும் அதுவும் உங்களது குலதெய்வத்தின் மேல் சத்தியம் வாங்கிக் கொண்டு வழங்கப்படுவதாக நான் கேள்விபட்டேன் . எனக்கென்ன கேள்விஎன்றால் ஒரு மூவாயிரம் பணத்தை உங்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் கடவுள் மேல் சத்தியம் வாங்கிக்கொண்டு தருகிறார்கள் என்றால் நாளைக்கு இவர்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களை அவர்கள்  நல்லா பாத்துப்பாங்கனு எப்படி நம்புறீங்க. அதே கடவுளிடம் போய் நான் யாரிடம் பணம் வாங்கினேனோ அவர்களுக்குதான் ஓட்டு போட்டேன் என்று சொன்னால் உங்கள் கடவுள் சந்தோஷப்படுவார் என்று நினைக்கிறீங்களா. கொஞ்சம் யோசிங்க. நாங்க எல்லாம் அதை யோசித்ததால் தான் தவெக துண்டை தைரியமா எடுத்து மாட்டிருக்கோம். இந்த கட்சியில் இருந்து உங்களுக்கு பணம் தரலல. தமிழ்நாடு நல்லா இருக்கனும் தமிழ்நாட்டு மக்கள் நல்லா இருக்கனும், கடைக்கோடி மனிதன் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்னும்னு உங்கள மட்டுமே நம்பி ஒருத்தர் எல்லாத்தையும் விட்டுட்டு வந்திருக்கிறார். ப்ளீஸ் அவர தயவு செய்து ஏமாத்திடாதீங்க. விசில் சின்னத்திற்கு ஓட்டுப்போட்டு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க. நல்லதே நடக்கும். கான்ஃபிடண்டா இருங்க." என ஜெய் இந்த வீடியோவில் பேசியுள்ளார்

Continues below advertisement

Continues below advertisement