2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கும் நிலையில் நடிகரும், திமுக ஆதரவாளருமான போஸ் வெங்கட் விஜயை கடுமையாக சாடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Continues below advertisement

2026ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி போட்டியிட்டுள்ளது. 233 தொகுதிகளில் அக்கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதேசமயம் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவி வரும் நிலையில் யாருக்கு வாக்கு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பும் கேள்வியும் எழுந்துள்ளது. 

இப்படியான நிலையில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மக்கள் காலை முதல் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இப்படியான நிலையில் நடிகர் போஸ் வெங்கட் விஜயை கடுமையாக சாடியுள்ளார். அவர் இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார். அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் தமிழ்நாடு முழுக்க பரப்புரை மேற்கொண்டார். 

Continues below advertisement

இந்த நிலையில் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “விளையாட்டாக எலெக்சன் வரைக்கும் வந்துட்டாரு விஜய்.. (நம்ம சட்டம் அப்படியிருக்கு) கொலைசெய்த எந்த குற்ற உணர்ச்சியுமின்றி .. ஒரு கொலைக்கு எத்தனை வருசம் தண்டனை? (பல அப்பாவிகள் சிரைச்சாலையில்) ஆனால் 41 உயிர் போக காரணமாக இருந்தவர்.. வாக்கு சேகரிக்கிறார்.. சுதந்திரமாக.. அவருக்கு தண்டனை?? பல்வேறு பொய்களை சொல்கிறார். நடிக்கிறார்.. கதறுகிரார்.. முட்டி போட்டு வேண்டுகிறார்.

தமிழக மக்கள் ,,, குறிப்பாக பெண்கள் உங்களுக்கு தக்க தண்டனை தர தயாராக உள்ளனர்.. திரு. விஜய் அவர்களே.. காலம் சரியான நேரத்தில் உங்களை மக்கள் முன் குற்றவாளியாக நிறுத்தும்.. தயாராக இருங்கள்.. நாளை மக்கள் உங்களுக்கு ( April 23). பதிலளிப்பார்கள்,.. மே4 க்கு பிறகு 41 அப்பாவி உயிகள் உங்களுக்கு முறையான தண்டனையை வழங்கும்.. அதற்கு தமிழகம் காத்திருக்கிறது.. வாழ்க தமிழ், வாழ்க ஜனநாயகம்” என தெரிவித்துள்ளார். இது தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை பெரும் ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது.