மாடப்பள்ளி கிராமத்தில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் கதிரிமங்கலம் கிராமத்தில் 90 வயது மூதாட்டியும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

 

தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குச்சாவடிகளில் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

 

இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி கிராமத்தில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தனக்கு பிடித்த திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளருக்கு வாக்கினை செலுத்தினார். இந்த நிலையில் அதேபோல கதிரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த 90 வயது மூதாட்டியை உறவினர்கள் வீல் சேரில் கொண்டு வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்ற வைத்தனர்.



 

இதன் காரணமாக தனது வாக்கினை தனக்கு பிடித்த வேட்பாளருக்கு 90 வயது மூதாட்டி வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். மேலும் தான் வாக்கு செலுத்தியதாக கையை உயர்த்தி ஒற்றை விரலை காண்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.