புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியில் 70 வார்டுகள் உள்ளது. இதில், திமுக கூட்டணி 54 இடங்களைக் கைப்பற்றியது. தாம்பரம் மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்பட்டு மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சி 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல தலைவர்களுக்கான தேர்தல் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.




பம்மல் , பல்லாவரம் மண்டலம்


ஒன்றாவது மண்டலமான பம்மல் மண்டலத்திற்கு திமுக சார்பில் மண்டல தலைவராக கருணாநிதி அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் போட்டியின்றி தேர்வானார். இரண்டாவது மண்டலமான பல்லாவரம் மண்டலத்திற்கு வேட்பாளராக, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் சகோதரர், ஜோசப் அண்ணாதுரை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் போட்டியின்றி தேர்வானார்.


சுயேட்சை வெற்றி


மூன்றாவது மண்டலமான செம்பாக்கம் மண்டலத்திற்கு திமுக சார்பில் மகாலட்சுமி கருணாகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.  அவரை எதிர்த்து 40 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் ஜெயபிரதீப்  போட்டியிட்டார். இவர் நடந்த முடிந்த நகர் மன்றத் தேர்தலில் திமுக சார்பில், வாய்ப்பு அளிக்காத காரணத்தினால் , தலைமை அறிவித்தது திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு சுயேச்சையாக  வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினர் ஆனார்.  




இதனை அடுத்து இன்று நடைபெற்ற மண்டல தலைவர் தேர்தலில் அவர் போட்டியிட்ட மூன்றாவது மண்டலத்தில், மொத்தம் உள்ள 14 வாக்குகளில் உள்ளன. இதில் மகாலட்சுமி மற்றும் ஜெயபிரதீப் ஆகிய இருவருக்கும் சமமாக   வாக்குகள் கிடைத்த நிலையில் வெற்றியை நிர்ணயிப்பதற்கு குலுக்கல் முறையில் கையாளப்பட்டதில்,  சுயேட்சையாக போட்டியிட்ட ஜெய பிரதீப் சந்திரன் வெற்றிபெற்றார். திமுக பிரமுகரான ஜெயபிரதீப் நகர் மன்றத் தேர்தலில் திமுக வேட்பாளரை எதிர்த்து, போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


தற்போது திமுக தலைமை அறிவித்த மண்டல தலைவர் பதவியும் எதிர்த்து போட்டியிட்டு கைப்பற்றியுள்ளார். இதுகுறித்து ஜெயபிரதீப் கூறுகையில், நான் ஆண்டாண்டு காலமாக எங்கள் குடும்பம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிறது எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட காரணத்தினாலேயே எதிர்த்து போட்டியிட்டேன். இது திமுகவிற்கு கிடைத்த வெற்றி. நானும் திமுககாரன்தான் என தெரிவித்தார். 





மாடம்பாக்கம் மண்டலம்


நான்காவது  மண்டலத்திற்கு திமுக சார்பில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் ராஜாவின் மைத்துனர் காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் போட்டியின்றி தேர்வானார். ஐந்தாவது மண்டலம் மாடம்பாக்கம் பகுதிக்கு திமுக சார்பில் இந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இருந்த நிலையில் யாரும் எதிர்த்து போட்டியிடாத்தால் போட்டியின்றி தேர்வு செய்யபட்டார்.


தாம்பரம் மாநகராட்சியில் நகர்மன்ற தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து திமுக வேட்பாளர்கள் பலர் சுயேச்சையாக வெற்றி பெற்றனர். இந்நிலையில் உட்கட்சிப் பூசலில் உச்சகட்டமாக மண்டல தலைவர் பதவியை தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் கைப்பற்றியிருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.