பெரியகண்ணனூர் கிராமத்தில் மாட்டு வண்டியில் சென்று திமுக வேட்பாளர் கருணாஸ் வாக்கு சேகரிப்பு.
திமுக வேட்பாளர் கருணாஸ் வாக்கு சேகரிப்பு
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் தெற்கு ஒன்றியம், பெரியகண்ணனூர் கிராமத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிவகங்கை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கருணாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கிராமத்தில் அவருக்கு பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர் ஆசைத்தம்பி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை, சால்வை உள்ளிட்டவற்றால் வரவேற்ற பொதுமக்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். பின்னர் வேட்பாளர் கருணாஸ் கிராமத்தில் மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் தொகுதி வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து பேசினார். தேர்தலில் வெற்றி பெற்றால் தொகுதி வளர்ச்சிக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்து செயல்படுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.
