இடைத்தேர்தலுக்கான திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்து மம்தா பேனர்ஜி ட்வீட். ஐந்து மாநில தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மேற்கு வங்கம் உட்பட நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் ஏப். 12ல் நடக்கும்' என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அறிவிப்பு வந்த நிலையில் கட்சிகள் வேட்பாளர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இது தொடர்பாக தேர்தல் கமிஷன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது, "நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் ஏப். 12ல் நடக்கும். மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள ஒரு லோக்சபா தொகுதிக்கும் இடைத் தேர்தல் அதே தேதியில் நடக்கும். இதற்கான ஓட்டு எண்ணிக்கை ஏப். 16ல் நடக்கும்." என்று அறிவித்திருந்தது.






மேற்கு வங்கத்தில் பாலிகாஞ்ச், சத்தீஸ்கரில் கைராகர்க், பீஹாரில் போச்சஹன், மஹாராஷ்டிராவில் வடக்கு கோலாபூர் சட்டசபை தொகுதிகளுக்கும் மேற்கு வங்கத்தின் அசன்சோல் லோக்சபா தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 12 இல் இடைத் தேர்தல் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 17-ம் தேதி தொடங்கி 24ம் தேதி நிறைவடைகிறது. மார்ச் 25-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை திரும்ப பெறுவதற்கு மார்ச் 28-ம் தேதி கடைசி நாள் ஆகும். ஏப்ரல் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏப்ரல் 16-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு இடைத்தேர்தல் முடிவு வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அசன்சோல் பாராளுமன்ற தொகுதிக்கு சத்ருகன் சின்ஹாவும், பாலிகங்கே சட்டசபை தொகுதிக்கு சுப்ரியா சுலேவும் வேட்பாளர்களாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.






அதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில் "பிரபல நடிகரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான, சத்ருகன் சின்ஹாவை அசன்சோல் தொகுதியின் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்." என்று எழுதியிருந்தார். அந்த டீவீட்டின் இரண்டாவது த்ரெட்டில், "முன்னாள் ஒன்றிய அமைச்சரும், பிரபல பாடகருமான, பபுல் சுப்ரியோ பாலிகங்கே சட்டமன்ற தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுவார்" என்று அறிவித்துள்ளார்.