Lok Sabha Election 2024: அதானி, அம்பானி வீட்டிற்கு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகளை அனுப்புங்கள் என, பிரதமர் மோடி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.


பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!


தொழிலதிபர்கள் அதானியும், அம்பானியும் காங்கிரஸ் கட்சிக்கு பணத்தை டெம்போவில் அனுப்பினார்களா என்பது குறித்து,  சிபிஐ அல்லது அமலாக்கத்துறை விசாரணை நடத்த பிரதமர் மோடிக்கு தைரியம் உண்டா என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி மற்றும் அம்பானியின் மீதான விமர்சனங்களை ராகுல் காந்தி  ஏன் நிறுத்தினார் என்றும், அதற்குப் பதிலாக அவர்களிடமிருந்து பணம் பெற்றாரா என்றும் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி கேள்வி எழுப்பிய நிலையில் ராகுல் காந்தி அதற்கு பதிலடி தந்துள்ளார்.






இதையும் படியுங்கள்: Air India Express: மொத்தமாக திடீர் விடுப்பு எடுத்த ஊழியர்கள் - 25 பேரை வேலையை விட்டு நீக்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்


ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோ:


பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு, வீடியோ வாயிலாக ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார். அதில், “பிரதமர் மோடி இரண்டு தொழிலதிபர்களுக்கு வழங்கிய பணத்திற்கு நிகரான தொகையை, காங்கிரஸ் கட்சி வாக்குறுதியளித்த பல்வேறு திட்டங்கள் மூலம் இந்திய மக்களுக்கு அளிக்கும். மோடி ஜி, உங்களுக்கு கொஞ்சம் பயமா? பொதுவாக அதானி, அம்பானி பற்றி மூடிய கதவுகளில் பேசுவீர்கள், ஆனால் முதல் முறையாக அதானி, அம்பானி பற்றி பொதுவெளியில் பேசியுள்ளீர்கள். அவர்கள் டெம்போவில் பணம் தருகிறார்கள் என்பது உங்களுக்கும் தெரியும். அது உங்கள் தனிப்பட்ட அனுபவமா?  ஒன்று செய்யுங்கள்,  அவர்களிடம் சிபிஐ, அமலாக்கத்துறையை அனுப்பி விரிவான விசாரணை நடத்துங்கள், பயப்பட வேண்டாம். பாஜகவின் ஊழலின் சாரதி மற்றும் உதவியாளர் யார் என்பது நாட்டுக்கே தெரியும்" என ராகுல் காந்தி காரசாரமாக பதிலளித்துள்ளார்.


இதையும் படியுங்கள்: 4 Wheel Drive: ஃபோர் வீல் டிரைவ் vs ஆல் வீல் டிரைவ்: எது பெஸ்ட்? கார்களின் இழுவை திறனுக்கான தொழில்நுட்பம்..!


மோடி சொன்னது என்ன?


தெலங்கானாவில் உள்ள வெமுலவாடாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,  தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, காங்கிரஸ் கட்சியினர் அம்பானி-அதானியை விமர்சிப்பதை நிறுத்திவிட்டனர். தெலுங்கானா மண்ணில் இருந்து நான் கேட்க விரும்புகிறேன், அம்பானியிடம் இருந்து எவ்வளவு பறிக்கப்பட்டது என்பதை ராகுல் காந்தி அறிவிக்கட்டும். அதானியிடம் இருந்து காங்கிரசுக்கு டெம்போ நிறைய பணம் வந்து சேர்ந்ததா?”  என கேள்வி எழுப்பியுள்ளார்.