கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 15 ஊராட்சி பதவிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் துவங்கி நடைபெற்றுவருகிறது. இதற்காக கரூர் மாவட்டத்தில் 78 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது குறிப்பாக இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி குழு 8 ஆவது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் அதிமுக வேட்பாளர் தானேஷ் (எ) முத்துக்குமார் இன்று மேலப்பாளையம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 30ஆவது வாக்குச்சாவடியில் தனது வாக்கை வரிசையில் நின்று பதிவு செய்தார். இதேபோல க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய 8 ஆவது வார்டுக்கான தேர்தலும் நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் நடக்கும் உள்ளாட்சி இடைத் தேர்தலில் 19 வார்டுகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. 42,605 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி 8 ஆவது வார்டு (பட்டியலின ஆண்) உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறுகிறது. 8 ஆவது வார்டில் 56 வாக்குச்சாவடிகள் உள்ளன.15,369 ஆண்கள், 16,814 பெண்கள், 3 இதரர் என மொத்தம் 32,186 வாக்காளர்கள் 56 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ளனர். க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் 8ஆவது வார்டு உறுப்பினர் (பொது) பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
இதில் தென்னிலை மேற்கு ஊராட்சியில் உள்ள 5 வார்டுகளில் 1,014 ஆண்கள், 1,098 பெண்கள், 1 இதரர் என மொத்தம் 2,113. மொஞ்சனூர் ஊராட்சியில் உள்ள 5 வார்டுகளில் 1,119 ஆண்கள், 1,250 பெண்கள் என மொத்தம் 2,369 என 2,133 ஆண்கள், 2,348 பெண்கள், 1 இதரர் என மொத்தம் 4,482 வாக்காளர்கள் 10 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ளனர். கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் சித்தலவாய் ஊராட்சி தலைவர் (பட்டியலின பொது) பதவிக்கான தேர்தலில் 6 வாக்குச்சாவடிகளில் 1,463 ஆண்கள், 1,487 பெண்கள் என மொத்தம் 2,950 பேர் வாக்களிக்க உள்ளனர்.
கடவூர் ஊராட்சி ஒன்றியம் காளையபட்டி ஊராட்சியில் 3, க.பரமத்தி, வேலம்பாடி, புன்னம், பிள்ளாபாளையம் ஊராட்சிகளல் தலா 1 வார்டு என மொத்தம் 7 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் 1,445 ஆண்கள், 1,542 பெண்கள் என மொத்தம் 2,987 பேர் வாக்களிக்கின்றனர். மொத்தம் 78 வாக்குச் சாவடிகளில் 20,310 ஆண்கள், 22,191 பெண்கள், 4 இதரர் என மொத்தம் 42,605 பேர் வாக்களிக்க உள்ளனர்.
காலை 7 மணிக்குத் தொடங்கிய தேர்தல் வாக்குப்பதிவு தற்போது ஒரு சில இடங்களைத் தவிர பல்வேறு இடங்களில் மந்தமாகவே வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.