DMK Candidate List Puducherry Election 2026: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு:
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் அவகாசம் நேற்றே முடிவடைந்தாலும், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த கட்சிக்கு,எந்த தொகுதி, என்பது இறுதியாகமால் இருந்தது. இதனால், பல்வேறு தொகுதிகளில் இரண்டு கட்சி நிர்வாகிகளுமே வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இந்நிலையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளில் பதிமூன்றில் திமுக நேரடியாக களமிறங்கும் என்றும், விசிக ஒரு தொகுதியிலும் போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது.
திமுக வேட்பாளர்கள் பட்டியல்:
- வில்லியனூர் - இரா.சிவா
- மங்கலம் - எஸ்.எஸ். ரங்கன்
- திருபுவனை - பி.அங்காளன்
- பாகூர் - ஆர்.ஆர். செந்தில்குமார்
- முதலியாபேட்டை - லி. சம்பத்
- உப்பளம் - வி.அனிபால்கென்னடி
- உருளையன்பேட்டை - எஸ். கோபால்
- நெல்லித்தொப்பு - வே. கார்த்திகேயன்
- ராஜ்பவன் - விக்னேஷ் கண்ணன்
- காலாப்பட்டு - ஏ. செந்தில் (எ) ரமேஷ்
- கதிர்காமம் - ப. வடிவேலு
- காரைகால் தெற்கு - ஏ.எம்.எச். நாஜிம்
- நிரவி டி.ஆர். பட்டினம் - எம். நாகதியாகராஜன்
உழவர்கரை பகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனித்து போட்டி என விசிக அறிவிப்பு:
காங்கிரஸ் உடனான கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளில் ஒன்றை, விசிகவிற்கு ஒதுக்குவதாக திமுக அறிவித்துள்ளது. அதேநேரம், புதுச்சேரியில் 3 தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளதாக, விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். இதனால், புதுச்சேரியில் அந்த கட்சி தனித்து போட்டியிடுகிறதா? அல்லது திமுக கூட்டணி ஒதுக்கிய ஒரே தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறதா? அல்லது உழவர்கரை தவிர மற்ற இரண்டு தொகுதிகளில் காங்கிரசுக்கு எதிராக வேட்பாளர்களை களமிறக்க உள்ளதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் வரும் 26ம் தேதி வரை உள்ளதால், அதன் முடிவிலேயே விசிகவின் நிலைப்பாடு குறித்து தெரிய வரும் என கூறப்படுகிறது.
8 தொகுதிகளை ஒதுக்கிய திமுக..
இதனிடையே, தமிழ்நாட்டில் விசிகவிற்கு 8 தொகுதிகளை ஒதுக்குவதாக திமுக உடனான தொகுதிப் பங்கீட்டில் திருமாவளவன் கையொப்பமிட்டுள்ளார். அதன்படி, அந்த கட்சிக்கு 6 தனித்தொகுதிகள் மற்றும் 2 பொதுத்தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விசிகவிற்கு 6 தனி தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை கூடுதலாக 2 தனி தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இரட்டை இலக்க தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென விசிக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கூட்டணியின் நன்மையை கருதி 8 இடங்களுக்கு ஒப்புக்கொண்டதாக திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
