தமிழகத்தில் அடுத்த மாதம் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தொகுதியை தி.மு.க. தனது கூட்டணி கட்சியான காங்கிரசிற்கும், அ.தி.மு.க. தனது கூட்டணி கட்சியான பா.ஜ.க.விற்கும் ஒதுக்கியுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மறைந்த எம்.பி. வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். பா.ஜ.க. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் 3.58,507 வாக்குகள் மட்டுமே பெற்று 6,16,168 வாக்குகள் பெற்ற எச்.வசந்தகுமாரிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.