சட்டமன்ற தேர்தலில்  தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக, அவரது மகள்கள் சம்யுக்தா மற்றும் சங்கமித்ரா ஆகியோர் மேற்கொண்டு வரும் தீவிர பிரச்சாரம் அந்தத் தொகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Continues below advertisement

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தனது தாயின் வெற்றிக்காக அவரது மகள்களான சம்யுக்தா மற்றும் சங்கமித்ரா ஆகியோர் தருமபுரி நகரின் முக்கியப் பகுதிகளான குமாரசாமிபேட்டை உள்ளிட்ட இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக, குமாரசாமிபேட்டை விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்ட அவர்கள், அதன் பிறகு அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்றனர்.

Continues below advertisement

ஒவ்வொரு வீட்டிலும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர்கள், "நாங்கள் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியின் மகள்கள்" எனக் கூறி, துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு கோரினர். இவர்களது இந்த எளிய மற்றும் கனிவான அணுகுமுறைக்கு, குறிப்பாக அப்பகுதி பெண் வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது..

இருவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பின்னர் அதே பகுதியில் இருக்கும் பெரியோர்களிடம் மற்றும் அந்த பகுதியில் இருக்கும் மக்களிடம் தருமபுரியில் போட்டியிடும் தனது தாய் சௌமியா அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார். மேலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள குடிநீர், சாலை திருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்சினை அனைத்து பிரச்சனைகளையும் தனது தாய் வெற்றி பெற்றால் செய்து தருவார் என்றும் அதனால் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார். வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.