PM Modi Speech: ”தெற்கில் புல்லட் ரயில்சேவை தொடங்கப்படும்” - நெல்லையில் பிரதமர் மோடி கியாரண்டி

18வது மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதியில் இருந்து நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலிக்கு தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வந்தார். 

Continues below advertisement

18வது மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதியில் இருந்து நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலிக்கு தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வந்தார். 

Continues below advertisement

அப்போது அவர் பேசுகையில், சென்னை - நெல்லை இடையிலான வந்தேபாரத் ரயிலானல் இந்த பகுதி அதிகப்படியான வளர்ச்சியை சந்தித்துள்ளது. தமிழ் புத்தாண்டு தினத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தெற்கிலும் புல்லட் ரயில் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளோம். தமிழ் மொழி மற்றும் தமிழ் பாரம்பரியத்தை விரும்புபவர்களின் முதல் தேர்வாக பா.ஜ.க மாறியுள்ளது. தமிழகத்தின் புராதான சின்னங்கள் உலகப் புகழ் பெறும். தமிழ்நாட்டின் மகளிர் மோடிக்கு ஆதரவளிப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றனர். மோடிக்கு பெண்கள் மத்தியில் இவ்வளவு ஆதரவு இருப்பதைப் பார்த்து ஆய்வாளர்களே ஆச்சரியப்படுகின்றனர். திருவள்ளுவர் கலச்சார மையம் உலகம் முழுவதும் தொடங்கப்படவுள்ளது. 

தமிழ்நாட்டு பெண்களின் சிரமத்தை உணர்ந்து அதனை துடைக்கும் செயலில் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம். தேசத்தை விரும்புபவர்களின் முதல் தேர்வாக பா.ஜ.க உள்ளது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை தி.மு.க தொடர்ந்து அவமதித்துக் கொண்டு உள்ளது. காமராஜரை தி.மு.க.,வும் காங்கிரஸ் கட்சியும் அவமதித்துக் கொண்டு உள்ளது. தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கும் நரேந்திர மோடிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. 

40 ஆண்டுகளுக்கு முன்னர் தி.மு.கவும் காங்கிரஸ் கட்சியும் திரை மறைவில் செய்ததை வெளிச்சம் போட்டுக்காட்டியது பா.ஜ.க தான். கச்சாத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது யார்? உங்கள் ஆசிர்வாதத்தால் ஊழல்வாதிகளுடன் சேர்ந்து பேதைப் பொருள் கடத்தல் காரர்களையும் எதிர்ப்பேன். வெளியே செல்லும் குழந்தைகள் போதை எனும் நரகத்தில் தள்ளப்படுவதால் மக்கள் செய்வதரியாமல் தவித்து வருகின்றனர். தமிழ்நாடு போதையை நோக்கி சென்று கொண்டுள்ளது. தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்க பெற்றோர்கள் பா.ஜ.கவுக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். பா.ஜ.கவுக்கு தமிழ்நாட்டில் ஆதரவில்லை என பல ஆண்டுகளாக தி.மு.கவும் காங்கிரஸும் கூறி வருகின்றனர். ஆனால் தமிழ்நாடு மக்கள் பா.ஜ.கவுக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். முதல் தலைமுறை வாக்காளர்கள் மனதிலும் பா.ஜ.க உள்ளது. 

ஒவ்வொரு நொடியும் எனது மனதில் உங்கள் பெயர்தான் அதாவது நாட்டின் பெயர்தான் ஓடிக்கொண்டு இருகின்றது. பா.ஜ.க.வைப் பார்த்து பயந்துபோய், பா.ஜ.க வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யாமல் தடுகின்றனர். ஏப்ரல் 19ஆம் தேதி ஒவ்வொரு பூத்திலும் நீங்கள் கவனமாக செயல்படவேண்டும். ஒருமுறை பாஜகவுக்கு வாக்களிக்குமாறு முதல் தலைமுறை வாக்காளர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன். பாஜக கூட்டணி வேட்பாளர்கள் உங்கள் குரலாக டெல்லியில் ஒலிப்பார்கள். நாட்டின் வளர்ச்சிக்கு நான் பாடுபடுவதற்கு பாஜகவினரை தேர்வு செய்து நீங்கள் எனக்கு உதவ வேண்டும். தமிழ் நாட்டில் எனது பரப்புரையை நிறைவு செய்கின்றேன். உங்களது வாக்குகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றேன். உங்களின் அன்பையும் ஆசிர்வாதத்தையும் பார்க்கும்போது இது தேர்தல் கூட்டம்போல் தெரியவில்லை, வெற்றிக் கூட்டமாக தெரிகின்றது” என பேசினார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola