மத்தியில் ஆட்சி அமைக்க மோடிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்ததையடுத்து, குடியரசு தலைவர் மாளிகை வெளியே செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய மோடி, "தேசிய ஜனநாயக கூட்டணியால் வலுவான, நிலையான அரசு அமைக்கப்படும்" என உறுதிபட தெரிவித்துள்ளார்.


"நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் வாய்ப்பளித்துள்ளனர்" தொடர்ந்து பேசிய அவர், "இந்த 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா உலகிற்கு விஸ்வபந்துவாக (உலகின் நண்பர்) உருவெடுத்துள்ளது. அதனால் ஏற்படும் அதிகபட்ச நன்மை இப்போது தெரிய தொடங்குகியுள்ளது. மேலும் அடுத்த 5 ஆண்டுகள், உலகளாவிய சூழலில் இந்தியாவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.


 






உலகம் பல நெருக்கடிகள், பல பதட்டங்கள், பேரழிவுகளை சந்தித்து வருகிறது. இவ்வளவு பெரிய நெருக்கடிகள் இருந்தபோதிலும், நாம் இன்று உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக அறியப்படுகிறோம். இந்தியர்களாகிய நாம் அதிர்ஷ்டசாலிகள். வளர்ச்சிக்காக உலகில் நாமும் போற்றப்படுகிறோம்.


ஆசாதி கா அம்ரித் மஹோத்சவுக்குப் (75ஆவது சுதந்திர தினம்) பிறகு முதல் தேர்தல் நடந்துள்ளது. மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். கடந்த இரண்டு தவணைகளில் நாடு முன்னேறிய வேகத்தில், ஒவ்வொரு துறையிலும் மாற்றம் தெரியும். 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீள்வது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையான தருணம்.


மோடிக்கு பழனிசாமி வாழ்த்து: குடியரசு தலைவர், இப்போதுதான் என்னை அழைத்து காபந்து பிரதமராக தொடருமாரு கேட்டுக் கொண்டார். பதவியேற்பு விழா குறித்து அவர் என்னிடம் தெரிவித்தார். ஜுன் மாதம் 9ஆம், மாலை பதிவியேற்பு விழாவு நடத்தலாம் என ஜனாதிபதியிடம் கூறியுள்ளேன்.


ராஷ்டிரபதி பவன் மற்ற விவரங்களைத் தயாரித்து, அதற்குள் அமைச்சர்கள் பட்டியலை ஜனாதிபதியிடம் ஒப்படைப்போம். அதன்பின் பதவியேற்பு விழா நடைபெறும்" என்றார்.


பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இந்திய நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்க உள்ள மோடிக்கு அதிமுக மற்றும் எனது சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.