தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்ததிலிருந்து யார் வெற்றி பெற்றார்கள், யார் தோல்வியடைந்தார்கள் என்பதை விட, யாருக்கு மூன்றாவது இடம் என்கிற கேள்வி தான் அதிகம் எழுந்தது. காரணம், மூன்றாம் இடத்தில் நாங்கள் என பாஜக உரிமை கொண்டாடியதும், ‛இல்லை... அது எங்கள் இடம்...’ என , காங்கிரஸ் உரிமை மீட்க வந்ததும் தான் அதற்கு காரணம்.


இங்கு கட்சியின் பலம் என்பது, எத்தனை இடங்களில் வெற்றி பெற்றோம் என்பதில்லை இல்லை, எத்தனை வாக்குகள் பெற்றோம் என்பதில் தான் உள்ளது என்பார்கள். அந்த வகையில், அதிக வாக்குகளை நாங்கள் தான் பெற்றிருக்கிறோம் என பாஜக கூறி வந்தது. மேலும் தனித்துப் போட்டியிட்டு, எங்களுக்காக கிடைத்த வாக்குகளால், எங்கள் பலத்தை நிரூபித்திருக்கிறோம் என்றது பாஜக. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி , திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும், அது கட்சியின் ஓட்டுகள் இல்லை என்றும் ஒரு விமர்சனமும் எழுந்தது. எது எப்படி இருந்தாலும், தேர்தலில், வெற்றி-தோல்வி மட்டுமே பிரதானம். அது கூட்டாக கிடைத்ததாக, தனியாக கிடைத்ததா என்பதில் இல்லை. இருந்தாலும் இதற்கான பதிலை, தேர்தல் ஆணையம் தான் தர வேண்டும் என காத்திருந்தனர். அதன் படி, மாநகராட்சி தேர்தலில்,  கட்சிகள் பெற்ற வாக்குகளை சதவீத அடிப்படையில் வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். இதோ அதன் விபரம்:

கட்சி மொத்த வேட்பாளர்கள் வென்ற வேட்பாளர்கள் வென்ற வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் மொத்த தபால் ஓட்டுகள் ஒட்டுமொத்த வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் வாக்கு சதவீதம்
திமுக 1121 948 3295187 9462 3557262 43.59
அதிமுக 1363 164 383971 2444 1961005 24
பாஜக 1134 22 36807 1195 585826 7.17
காங்கிரஸ் 122 73 199258 819 257881 3.16
நாம் தமிழர் 1114 0 0 356 205392 2.51
மநீம 671 0 0 278 148334 1.82
பாமக 569 5 8417 286 115741 1.42
அமமுக 879 3 7602 180 112653 1.38
மார்க்சிஸ்ட்  66 24 69565 302 106990 1.31
சுயேச்சைகள் 3038 73 141897 1070 692829 8.48

இந்த தகவலின் படி, மாநகராட்சி அளவில் போட்டியிட்ட கட்சிகளில் முதலிடம் திமுகவிற்கும், இரண்டாம் இடம் அதிமுகவிற்கும், மூன்றாம் இடம் பாஜகவுக்கும் கிடைத்துள்ளது. மற்ற கட்சிகள் அனைத்துமே 5 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளே பெற்றுள்ளனர். அதே நேரத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் 8.48 சதவீதம் வாக்குகளை இந்த மாநகராட்சி தேர்தலில் பெற்றுள்ளனர். 

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாரியாக அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த வாக்கு சதவீதம் இதோ:

கட்சிகள் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி
திமுக 43.59 43.49 41.91
அதிமுக 24 26.86 25.56
பாஜக 7.17 3.31 4.30
காங்கிரஸ் 3.16 3.04 3.85
நாம் தமிழர் 2.51 0.74 0.80
மநீம 1.82 0.21 0.07
பாமக 1.42 1.64 1.56
அமமுக 1.38 1.49 1.35
மார்க்சிஸ்ட் 1.31 0.82 1.34
தேமுதிக 0.95 0.67 0.55
மதிமுக 0.90 0.69 0.36
இந்திய கம்யூனிஸ்ட் 0.88 0.38 0.44
எஸ்டிபிஐ 0.85 0.62 0.49
விடுதலை சிறுத்தைகள் 0.72 0.62 0.49
இந்திய யூனியன் முஸ்லிம் 0.27 0.64 0.14
பகுஜன் சமாஜ் 0.24 0.10 0.04
சுயேச்சைகள் 8.48 14.25 16.32

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண