மத்தியில் கடந்த 10 ஆண்டுகள் பிரதமர் மோடி தூய்மையான ஆட்சி நடத்தி வருவதாக, பெரம்பலூர் தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் பாராட்டியுள்ளார். அதேவேளையில், தமிழ்நாட்டில் திமுக-வினர் ஊழல் ஆட்சி நடத்தி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், முசிறி சட்டமன்ற தொகுதி தா.பேட்டை ஒன்றியம் அயித்தாம்பட்டி பகுதியில், வாக்கு சேகரிக்க வந்தபோது, தேசிய ஜனநாயக கூட்டணியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே உரையாற்றிய பாரிவேந்தர், கடந்த 5 ஆண்டுளில், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 42 வகுப்பறைகள், சமூக கூடங்கள், ரேசன் கடை உள்ளிட்டவற்றை கட்டி கொடுத்திருப்பதாக தெரிவித்தார். கடந்த முறை ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரிகளாக ஆக்கியதுபோல், இந்த முறை, ஆயிரத்து 500 ஏழை குடும்பங்களுக்கு இலவச உயர் மருத்துவம் வழங்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.10 ஆண்டுகளாக மோடி சிறந்த முறையில் ஆட்சி செய்ததால், உலக தலைவர்கள் அவரை பார்த்து வியக்கின்றனர் எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் திமுக-வின் ஊழல் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், ஊழலும், ஊழல்வாதிகளும்தான் இங்கு உள்ளனர் என்றும் டாக்டர் பாரிவேந்தர் விமர்சித்தார். மக்களுக்கு சேவை செய்யும் நல்லவர்களை எம்.பி-யாக தேர்ந்தெடுங்கள் என டாக்டர் பாரிவேந்தர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, தும்பலம் கிராமத்திற்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் மத்தியில் பேசிய டாக்டர் பாரிவேந்தர், தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் தொகுதி மக்களின் தேவைகள் அனைத்தும் முழுமையாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தும்பலம் பகுதியில் சமுதாயக் கூடம் கட்டித் தரப்படும் என்றும், காவிரி குடிநீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். நாட்டுப்பற்று உடையவராக திகழ்ந்து வரும் மோடி, 3- வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி என பாரிவேந்தர் கூறினார். தமிழ்நாட்டில் அமைச்சர்கள் உட்பட திராவிட திருவாளர்கள் ஊழல்வாதிகளாக உள்ளனர் என விமர்சித்த டாக்டர் பாரிவேந்தர், ஊழல் செய்யாத, லஞ்சம் வாங்காத நல்லவர்களை, எம்.பியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் ஊழல் வாதிகள் என்றும், ஊழல்வாதிகளை அடையாளம் கண்டு, தேர்தலில் அவர்களை புறக்கணிக்க வேண்டும் என பெரம்பலூர் தொகுதி IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் கேட்டுக்கொண்டார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் IJK சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறார். செல்லும் இடமெல்லாம் டாக்டர் பாரிவேந்தருக்கு பொதுமக்களும், கூட்டணிக் கட்சியினரும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில், காவேரிப்பாளையம் பகுதியில், வார சந்தையில் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் வாக்கு சேகரித்தார்.
இதனைத்தொடர்ந்து, அய்யம்பாளையம் கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, NDA கூட்டணிக்கட்சியினரும், பொதுமக்களும் மேளதாளம் முழங்க, வாண வேடிக்கையுடன் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்களிடையே உரையாற்றிய டாக்டர் பாரிவேந்தர், தொகுதிக்கு செய்த நற்பணிகள் மற்றும் நாடாளுமன்றத்தில் அமைச்சர்களுடன் சந்திப்பு உள்ளிவை குறித்து புத்தகமாக வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார். மோடி ஆட்சி திறமையால் உலக நாடுகள் இந்தியாவை பாராட்டுகிறது, பெருமையாக பேசுகிறது என அவர் பெருமிதம் தெரிவித்தார். தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் MP-க்கள், நல்லவர்களாக, ஊழல் செய்யாத, லஞ்சம் வாங்காத நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். தொகுதி மக்களின் கோரிக்கையான அரசு மருத்துவமனை அமைத்து தரப்படும் என டாக்டர் பாரிவேந்தர் உறுதி அளித்தார்.
இதனைத்தொடர்ந்து ஜம்புநாதபுரம் பகுதியில் டாக்டர் பாரிவேந்தருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய டாக்டர் பாரிவேந்தர், எந்த ஒரு எம்.பியாவது.118 கோடி ரூபாய் செலவு செய்து, ஆயிரத்து 200 மாணவர்களை படிக்க வைத்து பட்டதாரி ஆக்குவார்களா? என கேள்வி எழுப்பினார். ஊழல் கட்சியிலிருந்து வருபவரை ஒருபோதும் தேர்ந்தெடுக்க கூடாது எனக் கேட்டுக்கொண்ட அவர், தன்னை எம்.பியாக தேர்ந்தெடுத்ததால், இப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்றும், துலையாநத்தம் ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டி தரப்படும், சமுதாய கூடம் கட்டி தரப்படும் என என்றும் டாக்டர் பாரிவேந்தர் உறுதி அளித்தார்.
இதனைத்தொடர்ந்து வாக்கு சேகரிக்க நல்லியம்பட்டிக்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, நல்லியம்பட்டி கிராமத்தில் வண்ண பேப்பர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது உரையாற்றிய அவர், நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விகள், அமைச்சர்கள் மற்றும் பிரமருடன் சந்திப்பு உள்ளிட்டவைகள் குறித்து Progress Report ஆக வழங்கி இருப்பதாகத் தெரிவித்தார். கடந்த முறை ஆயிரத்து 200 மாணவர்களை படிக்க வைத்து அவர்களை பட்டதாரிகாக்கியதுபோல், இந்த முறை மீண்டும் வெற்றிபெற்றால், ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை வழங்கப்படும் என உறுதி அளித்தார். ஊழல்வாதிகளை அடையாளம் கண்டு அவர்களை புறக்கணிக்க வேண்டும் எனக்கூறிய டாக்டர் பாரிவேந்தர், உங்களது தேவைகளை நிறைவேற்ற தாமரை சின்னத்திற்குக்கு வாக்களியுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.