நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19.2.2022 அன்று நடைபெற உள்ளதையொட்டி, அதிமுக சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்ல்செல்வமும் வேட்பாளர்களை ஆதரித்து

  15.2.2022 தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.  அதன்படி முதல்கட்ட பிரச்சாரமாக காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தனியார் திருமண மண்டபத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.




அப்போது ஓபிஎஸ் பேசியதாவது, திமுகவின் சுய உருவத்தை மக்கள் அறிந்து கொண்டார்கள் மக்கள் தற்போது வருத்தம் அடைந்து இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியின் போது ஜெயலலிதா அவர்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் செய்துவிட்டார்கள் .திமுகவினர் வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பிலுள்ள எதையுமே பயன்படுத்த முடியவில்லை, இப்படிதான் கேடுகெட்ட ஆட்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் அறிந்து புரிந்து உள்ளார்கள். மக்களை திமுக அரசு நேரில் சந்திக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.





தெருக்களில் பிரசாரம் செய்தால் மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும், மக்களுக்கு என்ன தேவையோ அதை அதிமுக அரசு வழங்கியது. மக்கள் கேள்வி கேட்பார்கள் என்று பயந்து வீட்டு வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரச்சாரம் செய்கிறார் முதல்வர். காவிரி பிரச்சினை முல்லை பெரியாறு பிரச்சினை வரைந்து அவற்றை காப்பாற்றிய அரசாக அதிமுக அரசு உள்ளது. அப்போது 17 ஆண்டுகாலம் மத்தியிலும் மாநிலத்திலும் திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தார்கள். ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் ரத்து செய்யப்படும் ஆனால், அது தற்போது பெரிய விவாதப் பொருளாக உள்ளது. நீட் முதல் முதலில் 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த காந்திராஜன் அதை நாடாளுமன்றத்திலும் மக்களவையிலும் கொண்டு வந்தார்.




தற்பொழுது நீட் ரத்து செய்ய வேண்டும் என்று நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். திமுகவின் பகல் வேஷம் கலைந்து விட்டது. திமுக ஆட்சியில் அவல நிலையை மக்கள் தற்போது நன்கு அறிந்திருக்கிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள்  தீர்ப்பை அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் முழுவதும் 100% தமிழகம் முழுவதும் வெற்றி பெற வேண்டும் என பேசினார். வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக வேட்பாளர்கள் மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர