வாளி, பலா, திராட்சை சின்னங்களில் ஒன்றை கேட்டுள்ளதாக பாஜக கூட்டணியில் உள்ள ஓபிஎஸ் தெரிவித்தார்.
மக்களவை தேர்தல்:
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டுக்கு முதல்கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் ஒரு தொகுதியில் ஓபிஎஸ் போட்டி என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
Also Read: Power Pages-11: இரட்டை இலைக்கு எதிராக வாக்கு சேகரித்த எம்.ஜி.ஆர். - காரணம் என்ன?
களத்தில் இறங்கிய ஓபிஎஸ்:
ஆனால் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு இருப்பதால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறோம். இரட்டை இலை என்பதே இலக்கு; இந்நிலையில் தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க, ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம்; ராமநாதபுரம் தொகுதியில், நானே போட்டியிடுகிறேன் என யாரும் எதிர்பாராத அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்”.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் திமுக கூட்டணி சார்பாக ஐ.யு.எம்.எல் கட்சியைச் சேர்ந்த நவாஸ் கனி போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக ஜெயபெருமாள் போட்டியிடுகிறார். தனது பலத்தை நிரூபிப்பேன் என ஓபிஎஸ் போட்டியிடவுள்ளதாக எடுத்துள்ள இந்த முடிவானது, பெரும் சவால் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது.
சின்னம்:
பாஜக கூட்டணியில் உள்ள ஓபிஎஸ், சுயேச்சை சின்னத்தில் போட்டியிடவுள்ள நிலையில், எந்த சின்னத்தில் போட்டியிடவுள்ளார் என்பது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து, தெரிவித்த ஓபிஎஸ், வாளி, பலா, திராட்சை சின்னங்களில் ஒன்றை கேட்டுள்ளோம் என தெரிவித்தார்.