தாயும் மகளும் வெவ்வேறு கட்சி சார்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், இது குறித்து இருவரும் விளக்கம் அளித்துள்ளனர்.
மறைந்த வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, திமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் உள்ளார். இவரது மகள் வித்யா ராணி நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுகிறார்.
மகள் வித்யா ராணி :
இது குறித்து வீரப்பனின் மகள் வித்யா ராணி தெரிவிக்கையில், எனது அம்மா எனக்கு அரசியலில் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். நான் நாம் தமிழர் கட்சியில் வருவதற்கு முன்பாகவே, எனது அம்மா வேறு கட்சியில் இருந்தார். நான் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக இருக்கிறேன். நான் எனது கட்சிக்கு நேர்மையாக இருக்கிறேன். எனது அம்மா, அவர் கட்சிக்கு நேர்மையாக இருக்கிறார். எங்கள் அரசியல் என்பது மக்களுக்கு சேவைதான், எங்கிருந்தாலும் நோக்கம் ஒன்றுதான்.
மேலும் தெரிவிக்கையில், நாம் தமிழர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மகிழ்ச்சிதான் என தாயார் தெரிவித்தார். வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
மனைவி முத்துலட்சுமி:
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இருந்து திமுக கூட்டணிக்கு ஆதரவாக சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். உங்களது மகள் வித்யா ராணியும் நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளராக களமிறங்குகிறார்; அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க செல்வீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த வீரப்பனின் மனைவி, எனது மகளுக்கு ஆதரவாக போக முடியுமா என்பது சொல்ல முடியாது, ஏனென்றால் நான் வேல்முருகன் தலைமையை கொண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளேன். தமிழக வாழ்வுரிமைக் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது. இதன் காரணமாக திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறேன் என தெரிவித்தார்.
Also Read: ABP NADU EXCLUSIVE: எல்லாம் தனியார்மயம்; மக்களிடம் வரி: வெளுத்து வாங்கிய சீமான் - சிறப்பு பேட்டி