நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனர் வழக்கறிஞர் மகாராஜன் நெல்லையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  நயினார் நாகேந்திரன் மீது பரபரப்பு புகார்களை தெரிவித்தார். குறிப்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் சென்னையில் 4 கோடி ரூபாய் பிடித்துள்ளனர். அவரது மேனேஜர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர். விசாரணை  நடந்து வருவதாக தகவல். இது ஒரு புறமிருக்க 


நெல்லை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்ட அன்று இரவு அவரது வீட்டில் இருந்து ஏடிஎம் பணம் எடுத்துச் செல்லும் வாகனம் வந்து சென்றுள்ளது. அந்த ஏடிஎம் வாகனத்தில் என்ன வந்தது? கோடிக்கணக்கான ரூபாய் வாக்காளர்களுக்காக பட்டுவாடா செய்ய இருந்ததாக சொல்கிறார்கள். அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆகவே போலீசார், வருமானவரித்துறை, அமலாக்குத்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும். பல நூறு கோடி ரூபாய்களை கொண்டு வந்ததா? பணம் எடுத்து வருவதற்காக அந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதா என்பதை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும. அண்ணாமலை  நாங்கள் பணம் கொடுக்க மாட்டோம், அந்த ஓட்டு எங்களுக்கு  தேவையில்லை என்கிறார். ஆனால் இங்கு நடக்கும் சம்பவங்களை பார்க்கும் பொழுது நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் அதிக அளவு பணப்புழக்கத்தில் ஈடுபட்டது தெரிய வருகிறது. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை நெல்லை பாராளுமன்றத் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும். நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட வேண்டும். அவர் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏடிஎம் வாகனம் எதற்கு அவருடைய வீட்டிற்கு சென்று விட்டு வர வேண்டும். அதற்கு காரணம் என்ன? அதுவும் இரவு நேரத்தில் வந்த வாகனத்தில் பணம் கொண்டு வந்திருக்கலாம் என தெரிய வந்ததுள்ளது. 


தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க இருக்கிறோம். அவர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தை நாட இருக்கிறோம். பாஜக என்பது மிஸ்டர் கிளீன் என்று தங்களை சொல்லிக் கொள்கின்றனர். அப்படிப்பட்ட பாஜக பொதுவாழ்க்கையில் ஊழல் கறைபடிந்த அதே போல சொத்துக்குவிப்பு வழக்கில், சம்பந்தமுடைய பத்திர மோசடி வழக்கில், நில மோசடி வழக்கில், தனிமனித வாழ்க்கையில் தனிமனித ஒழுக்கமற்ற வேட்பாளரை நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நிறுத்தியுள்ளனர். அப்படியென்றால் பாஜக  மிஸ்டர் கிளீன் என்று சொன்னதற்கு இந்த இடத்தில் என்ன அர்த்தம் என்று புரியவில்லை.  தேர்தலில் தோல்வி பயத்தால் பணம் கொடுப்பதற்கு பயன்படுத்த பட்டிருக்கலாம். நான் அதிமுகவில் இருப்பதால் எங்கேயும் எந்த இடத்திலும் அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கள், திமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள், பாஜகவுக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறுவதில்லை. கூறவும் மாட்டேன். எங்களை பொறுத்தவரை தகுதி இல்லாத வேட்பாளர்களை அதிமுகவில் நிறுத்தினால் கூட எதிர்ப்போம் அது எங்களின் நிலைப்பாடு. யார் பக்கம் நியாயம் இருக்கிறதோ அந்தப் பக்கம் தான் நான் நிற்பேன் என்று தெரிவித்தார்.