வேலூரில் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்றது. இதில், வேட்பாளர் கதிர் ஆனந்தை திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அறிமுகப்படுத்தினர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன் "மோடி மிக உயர்ந்த பதவியில் இருக்கிறார். அவர் எங்களை பார்த்தது ( திமுக) வீட்டுக்கு அனுப்ப போகிறோம் என்று கூறுவது அவர் பதவிக்கு ஏற்ற நாகரிகமான பேச்சு அல்ல. நாங்கள் என்ன தவறு செய்தோம் எங்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு. தமிழக மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து இருக்கிறோம். ஆனால் மத்தியில் ஆளும் நீங்கள் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்? சென்னையிலும் திருநெல்வேலியிலும் மழை வெள்ளம் வந்தபோது, ஒரு காலன காசு கூட கொடுக்கவில்லையே நீங்கள். காசு கொடுக்வில்லை என்றாலும் பரவாயில்லை. வெள்ள நீர் பாதிப்பில் மக்கள் பட்ட துயறத்தை நேரில் வந்தாவது பார்த்து சென்று இருக்கலாம். அதையாவது வந்து பார்த்தீர்களா?


 




மோடி வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்று சொல்கிறீர்கள்


இப்போது தேர்தல் வாக்கு கேட்க மட்டும் 6 முறை தமிழ்நாட்டிற்கு வருகிறீர்கள். ரோடு ஷோ நடத்தி அங்கும் இங்கும் கை அசைக்கிறீர்கள். ஏன் அன்னைக்கு வந்து மக்களை பார்க்க வேண்டியதுதானே?  அன்னைக்கு சென்னைகும் திருநெல்வேலி மக்களுக்கு தேவையான அனைத்தையும் நாங்கள் செய்தோம். அதற்காக எங்களை தொடைத்து எறிந்து வீட்டுக்கு அனுப்ப போகிறிர்களா? வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்று சொல்கிறீர்கள். ஏன் வாரிசு அரசியல் செய்யக் கூடாதா மோடி அவர்களே? நாங்கள் ஒன்று இரண்டு பெத்து போட்டு இருக்கோம். அந்த பிள்ளைகள் அண்ணா, பெரியார், வழியில் அரசியலில் நுழைகிறார்கள். அவர்களின் திறமையால் வளர்கிறார்கள் அதில் என்ன தவறு இருக்கிறது. நேரு குடும்பம் வாரிசு அரசியில் செய்து, இந்தியாவை கெடுத்துவிட்டது என்று நீங்கள் கூறுவது மோசமான பேச்சு மோடி அவர்களே. "நேரு குடும்பத்தில் வந்த இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி போன்றவர்கள் இந்திய நாட்டு மக்களுக்காக உயிரை தியாகம் செய்தவர்கள். சோனியா காந்தி பிரதமர் பதவியை வேண்டாம் என்று தூக்கி வீசியவர். அவர்கள் குடும்பம் இந்திய நாட்டு மக்களுக்கு செய்த தியாகம் இல்லையா? அதனால் வீட்டுக்கு அனுப்ப போகிறீர்களா? 


 




மிசா கைதியாக தமிழ்நாட்டு மக்களுக்காக ஸ்டாலின் சிறைக்குச் சென்றார்


மிசா கைதியாக தமிழ்நாட்டு மக்களுக்காக ஸ்டாலின் சிறைக்குச் சென்றார் அது தியாகம் இல்லையா? துரைமுருகன் ஆகிய நான் கோயம்புத்தூர் சிறையில் இருந்து இருக்கிறேன். சேலம் சிறையில் இருந்து இருக்கிறேன். வேலூர் சிறையில் இருந்து இருக்கிறேன். சென்னை சிறையில் இருந்திருக்கிறேன். மிசா கைதியாக வேலூர் சிறையில் இருக்கும்போது மூன்று மாத காலம் யாரயும் சந்திக்கவிடாமல் போலீஸ் தடுத்தது. மூன்று மாத காலத்திற்கு பிறகு என் மனைவி என் மகன் கதிர் ஆனந்தை 1 வயது குழந்தையாக தூக்கி வந்து என்னிடம் கொடுத்தபோது அவனை வாங்கி என் தோலில் போட்டதும் பின்னால் வந்த வார்டன் என்னை அடித்து குழந்தையை இழுத்து தள்ளினார். என் மகனை கூட தொட அப்போது அனுமதிக்கவில்லை. இந்த மண்ணின் மீது சத்தியம் வைத்து சொல்கிறேன் அதன் பிறகு ஓரண்டு காலம் என் மகனை நான் பார்க்கவே இல்லை. இது தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்த தியாகம் இல்லையா?


 




பிரதமரே ஒரு சந்தேக கேசிலாவது நீங்க சிறைக்கு போய் இருக்கிறீர்களா? 


அதேபோன்று கை குழந்தையாக அப்பாவை பார்க்காமல் என் மகன் இருந்தானே அது குழந்தை தியாகம் அல்லவா என்று கண் கலங்கினார் துரைமுருகன்." "இவ்வளவு தியாகம் செய்த எங்களை பார்த்து வாரீசு அரசியல் செய்கிறீர்களா என்று கேட்பதற்கு மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது.  மகா பெரியவரே பிரதமரே ஒரு சந்தேக கேசிலாவது நீங்க சிறைக்கு போய் இருக்கிறீர்களா? காங்கிரசும், திமுகவும் தியாகத்தை செய்து இருக்கிறது மக்களுக்கு. இப்படிபட்ட எங்களை பார்த்து வாரிசு அரசியல் செய்வதாக கூறுகிறார்கள் மோடி நீங்கள் போட்ட சட்டத்தினால் இந்தியாவில் உள்ள முஸ்லீம் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவிலேயே பிறந்து இந்தியாவிலேயே வளர்ந்த இஸ்லாமியன் உங்கள் சட்டத்தினால் பாதிக்கப்படுகிறான் அவன் என்ன பாகிஸ்தானிலா பிறந்தான். மதத்தால் அவன் இஸ்லாமியன் ஆனால் நாட்டால் இந்தியன்.இந்திய சுதந்திரத்திற்கு ஜிந்தா பாத் என்று வேலூர் கோட்டையில் முதல் கொடியை தூக்கியவர்கள் இஸ்லாமியர்கள் அவர்களாலா இந்தியாவுக்கு பாதிப்பு வந்துவிடப் போகிறது? மோடி புரிந்துகொள்ள வேண்டும்.


 




மோடி  ஒரே நாடு, ஒரே மதம், ஒரே சாமி, ஒரே தேர்தல், ஒரே சட்டம். இதுதான் உங்கள் இலட்சியம்


மோடி  ஒரே நாடு, ஒரே மதம், ஒரே சாமி, ஒரே தேர்தல், ஒரே சட்டம். இதுதான் உங்கள் இலட்சியம். சத்தியமாக செய்கிறேன் இந்த நிலை நீடித்தால் ஜனநாயகம் இல்லாமல் போயிடும். மரியாதையோடு கேட்கிறேன்  இந்தியா சர்வாதிகார நாடு அல்ல, சம தர்ம நாடு இது.  என் மகன் கதிர் ஆனந்திற்கு ரெய்டு விட்டு சிறைக்கு அனுப்ப சிலர் முயற்சித்து கொண்டு இருக்கிறார்கள். சாபாஸ் செய்யட்டும் என் மகனை நான் சிறைக்கு அனுப்ப தயார். துரைமுருகன் பேடி அல்ல கலைஞரால் வளர்க்கப்பட்ட காலை நான். 53 வருடங்கள் எம்.எல்.ஏ வாக பதவியில் இருந்தவன். எங்கையோ குக் கிராமத்தில் பிறந்த துரைமுருகன் இன்று திமுக கட்சியின் பொதுச் செயலாளர். இது என் கட்சி என்னை வளர்த்தவர் கலைஞர். பிரைமினிஸ்டர் மோடி சாமி என் கட்சியை பற்றி பேசாதீர்கள், என் கடையை சந்தேகப் படாதீர்கள், எங்க கடையின் மீதுகை வைப்பயாக சொல்லாதீர் எங்களுக்கு ரத்தம் தொதிச்சப் போய்விடும். என் பொண்டாட்டி, பிள்ளை, குடும்பம் அத்தனையும் விட நான் அதிகம் நேசிக்கும் கட்சி திமுக." என கடும் ஆவேசமாக பேசினார் துறைமுருகன்.